வேட்டையான் கிணறு சப்த கன்னிமார்கள் கோவில் ஆடி 18 பூஜை விழா.
பெருந்துரை, வேட்டையான் கிணறு ஊராட்சியில் நமது தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் கௌரவ தலைவர் திரு.J.மோகன் சிங் அவர்களின் பண்ணை வீட்டருகே சப்த கன்னிமார்கள் கோவில் அமைந்துள்ளது.
சப்தகன்னிமார்களை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பல மாவட்டங்களில் வசிக்கும் இராஜபுத்திர சமூகத்தினரின் குல தெயவமாக வழிபட்டு வருகிறார்கள். ஒவ்வொரு ஆணடும், ஆடி 18 அன்று சப்தகன்னிமார்களுக்கு வெள்ளி வஸ்திரங்கள் அணிவித்து, திரு.J.மோகன் சிங் அவர்கள் தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இன்று ஆடி 18 அன்று பெருந்துரை திரு J.மோகன் சிங் அவர்கள் தலைமையில் சப்த கன்னிமார்கள் கோவில் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங், மாநில இளைஞரணி கௌரவ அமைப்பாளர் திரு.M.திவாகர் சிங், திருப்பூர் கிளை தலைவர் திரு.R.குலாப் சிங், திருப்பூர் கிளை செயலாளர் திரு.A.சந்தர் சிங், ஓசூர் கிளை தலைவர் திரு.T.பாலாஜி சிங், ஓசூர் கிளை பொருளாளர் திரு. N.L.சங்ர் சிங், மாநில இளைஞரணி அமைப்பு துணை செயலாளர் திரு.M.அசோக் குமார் சிங் ஈரோடு மாவட்ட செயலாளர் திரு.மகேந்தர் சிங், ஈரோடு மாவட்ட மகளிரணி நிர்வாகி திருமதி.லக்ஷ்மா சங்கர் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். 250 க்கு மேற்பட்ட இராஜபுத்திர சொந்தங்கள் பூஜையில் கலந்துக் கொண்டு அம்மனின் அருளை பெற்றனர்.பூஜையில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் மாநில இளைஞரணி கௌரவ அமைப்பாளர் திரு.M.திவாகர் சிங் அவர்கள் நாவிற்கினிய அறுஞ்சுவை உணவை வழங்கினார்கள்.
மாலை மாநில கௌரவ தலைவர் திரு.J.மோகன் சிங் அவர்களின் பண்ணை வீட்டில் உள்ள மண்டபத்தில் திரு.J.மோகன் சிங் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சமுதாய கூட்டம் நடைபெற்றது.
நம் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார்கள். சமுதாய தொண்டை போலவே ஆன்மீக தொண்டையும் சிறப்புடன் ஆற்றி வரும் மாநில கௌரவ தலைவர் திரு.J.மோகன் சிங் அவர்களுக்கும், மாநில இளைஞரணி கௌரவ அமைப்பாளர் திரு.M.திவாகர் சிங் அவர்களுக்கும், தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்