தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மின் இதழின் மூன்றாம் பதிப்பு வெளியீட்டு விழா மற்றும் தென் சென்னை மாவட்ட ஆலோசனை கூட்டம்
31.10.2021 அன்று மாலை 7 மணியளவில் அசோக்பில்லர், ஹோட்டல் சரவணபவன் நிகழ்ச்சி அரங்கத்தில் நடைபெற்றது.
தென் சென்னை மாவட்ட துணை தலைவர் திரு.மஞ்சுநாத் சிங் அவர்கள்..
மாநில துணை தலைவர் திரு.S.இந்தர் சிங் அவர்களை கூட்டத்துக்கு தலைமை தாங்கும் படி அழைத்தார்கள்.
மேலும் மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங், மாநில பொது செயலாளர் திரு J பிரகாஷ் சிங், மாநில உதவி செயலாளர் திரு E.ராஜேந்திர் சிங், மின் இதழின் இணை ஆசிரியர் திரு B.K.பாலாஜி சிங் அகியோரை கூட்டத்தை வழி நடத்தி தரும் படி கேட்டுக் கொண்டார்.
மின் இதழின் இணை ஆசிரியர் திரு.B.K.பாலாஜி சிங் இறை வணக்கம் பாட கூட்டம் துவங்கியது.
தென் சென்னை மாவட்ட பொருளாளரும், நிர்வாக குழு உறுப்பினருமான திரு.N.மகேந்திரநாத் சிங் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.
மின் இதழின் மூன்றாம் பதிப்பை மாநில துணை தலைவர் திரு S.இந்தர் சிங் அவர்களிடம்…
மாநில துணை தலைவர் திரு K. விஜயகுமார் சிங் அவர்கள்..
மாநில பொது செயலாளர் திரு.J பிரகாஷ் சிங், மாநில உதவி செயலாளர் திரு.E.ராஜேந்தர் சிங், மின் இதழின் இணை ஆசிரியர் திரு.B.K.பாலாஜி சிங் ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்கள்.
TNRBA இணையதளம் மற்றும் மின் இதழின் இயக்குனரும், மாநில பொது செயலாளருமான திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள்…
மின் இதழில் இடம் பெற்றுள்ள தகவல்கள், சங்கத்திற்கு கிடைத்து வரும் பலன், மின் இதழின் வெற்றி பயணம், தேவையான எதிர்கால ஒத்துழைப்பை பற்றி விளக்கினார்கள். நம் தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையில் சங்கம் ஆற்றி வரும் பணிகள், சாதனைகள், எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
மாநில உதவி செயலாளர் திரு E.ராஜேந்தர் சிங் அவர்கள்…
மின் இதழை வெளியிட மாநில பொது செயலாளர் எடுத்து வரும் அக்கரை மற்றும் அவரது உழைப்பை சொல்லி பாராட்டி பேசினார். நம் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் ஆளுமை, அவரது தலைமையின் கீழ் சங்கம் அடைந்து வரும் வளர்ச்சிகள் பற்றி விளக்கினார்கள். சங்க உறுப்பினர்களிடையே இருக்க வேண்டிய அன்பின் தேவையை கதை மூலம் கூறி உற்சாக படுத்தினார்.
மின் இதழின் இணை ஆசிரியர் திரு.B.K.பாலாஜி சிங்…
மின் இதழை உருவாக்குவதில் உள்ள சிரமங்கள், தேவை படும் உழைப்பு, இயக்குனரின் கால அர்ப்பணிப்பு, அவரது தொழில்நுட்ப திறமைகளை பற்றி எடுத்துரைத்தார்கள்.
மாநில துணை தலைவர் திரு K.விஜயகுமார் சிங்…
சமுதாயத்தின் தலைவர் Dr.G.பவானி சிங் பிதாமகன் எனவும் திரு.S.இந்தர் சிங் துரோணாச்சாரி எனவும் புகழாராம் சூட்டினார்கள். பொது செயலாளர் திரு J.பிரகாஷ் சிங் நமக்கு கிடைத்த வரபிரசாதம் என பெருமிதம் கொண்டார். சங்க உறுப்பினர்கள் அனைவர் முன்னுள்ள கடமைகளையும் சுட்டிக் காட்டினார்கள்.
தென் சென்னை மாவட்டத்தை சேர்ந்த திருமதி.பாரதி அவர்களும்,
திரு.சதீஷ் அவர்களும் தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தார்கள்.
அடுத்து தென் சென்னை மாவட்ட கலந்துரையாடல் நடந்தது. தென் சென்னை மாவட்ட தலைவர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு பெற்ற திரு.நாகேஷ்வர் சிங் அவர்களுக்கும் இணை செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு பெற்ற திரு.G.பாலாஜி சிங் அவர்களுக்கும் பாராட்டுதல்களும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டது.
தென் சென்னை மாவட்டத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு காலியிடங்கள் நிரப்புவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட கிளை சங்க ஆலோசனைகளுக்கு மாவட்ட உறுப்பினர்களை மட்டுமே கொண்ட வாட்சப் குழு உருவாக்க ஆலோசனைகள் வழங்கப்பட்டது. புதிய நிர்வாக குழுவினருக்கான பரிந்துரைகள் செய்யபட்டு அவர்களை மாவட்ட உறுப்பினர்கள் ஒருமித்த கருத்துடன் மாநில தலைமை சங்க நிர்வாகிகள் முன்னிலையில் தேர்ந்தெடுத்தார்கள். அவர்கள் விபரம்:-
1). தலைவர் : Dr.G.கோவர்த்தன சிங்
2). துணை தலைவர் : திரு.மஞ்சுநாத் சிங்
3). செயலாளர் : திரு.N.மகேந்தரநாத் சிங்
4). பொருளாளர் : திரு.பீம் சிங்
5). இணை செயலாளர் : திரு.கணேஷ் சிங்
புதிய நிர்வாகிகளுக்கு தலைமை சங்கத்தின் சார்பாக பாராட்டுதல்கள் தெரிவிக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டார்கள்.
மாநில துணை தலைவர் திரு.S.இந்தர் சிங் அவர்கள் தன்னுடைய தலைமை உரையில்…
நமது சங்கம் கடந்து வந்த பாதை, திறமையான மாநில தலைவர் தேர்வு, Dr.G.பவானி சிங் அவர்களின் திறமை ஆற்றல், அரசாங்கத்திடமான நமது அணுகுமுறை, சங்கத்தின் வளமான எதிர்காலம் ஆகியவைகள் பற்றி அருமையாக விளக்கினார்கள்.
மாநில தலைவருக்கு பக்க பலமாக இருந்து, அவரது திறமையான வழிமுறையால் நம் சங்கத்தின் வளர்ச்சியை, மூத்த நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு செல்லும் மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள், 10-15 ஆண்டுகளுக்கு முன்பு நம்மிடம் இருந்திருந்தால் நம் சங்க வளர்ச்சி நிச்சயம் அதிகமாக இருந்திருக்கும் என கதை கூறி பாராட்டினார்.
தலைமை சங்க நிர்வாகிகள், சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள், முக்கிய உறுப்பினர்கள் மாவட்ட நிர்வாகிகளால் கௌரவிக்கப்பட்டார்கள்.
மாவட்ட செயலாளரும், புதிதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட Dr.M.கோவர்த்தன சிங் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். தென் சென்னை மாவட்டம் தன்னை
வலுப்படுத்தி, தலைமை சங்கத்தின் வழிகாட்டுதல்களின்படி ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒட்டுமொத்த சங்கத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என உறுதி கூறினார். கூட்டத்தில் கலந்துக் கொண்ட தென் சென்னை மாவட்ட உறுப்பினர்கள் தலைமை சங்க நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
தொடர் மழை இருந்தும் தென் சென்னை மாவட்ட உறுப்பினர்கள் அதிக அளவில் கலந்துக் கொண்டதும், மழையால் பலர் கலந்து கொள்ள இயலவில்லை என தெரியபடுத்தியதும் தென் சென்னை மாவட்டம் புத்துணர்ச்சியுடன் செயல் பட்டு மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களது கரங்களை வலுப்படுத்தும் என்பதை பறைசாற்றியது.
கலந்துக் கொண்ட அனைவருக்கும் இரவு உணவு ஏற்பாடு செய்யபட்டிருந்ததது. இரவு 9.30 மணியளவில் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.
வாழ்க ராஜ்புத் பொந்தில் சங்கம் ! வளர்க ஒற்றுமை !!
J.பிரகாஷ் சிங்
மாநில பொது செயலாளர்.


























