










அன்பு சொந்தங்களே !!
“ஸ்னேக மிலன்” என்ற சமூக கூட்டம் 04.04.2021 அன்று ஓசூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நம் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சமூகமும் முக்கிய பங்கேற்பாளர்களில் ஒருவராக இருந்தது.
சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ.கஜேந்திர சிங் சேகாவத் கலந்து கொண்டார். அவர் நம் ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நம் சமூகத்தின் கோரிக்கைகளை அவரிடம் முன்வைத்து, நம் இலக்குகளை அடைய அவரது ஆதரவைக் கோரினோம். மத்திய அமைச்சர் முழு மனதுடன் ஆதரவளிப்பதாக உறுதியளித்தார், தேர்தல்கள் முடிந்ததும் அதைக் கவனிப்பதாகவும் உறுதியளித்தார். பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட தேதியில் மேற்க்கொண்டு கலந்துரையாட நம் தலைவர் டாக்டர் ஜி. பவானி சிங் ஜியை டெல்லிக்கு அழைத்துள்ளார்.
நிகழ்வின் முக்கிய சிறப்பம்சங்கள்: –
1).நம் தலைவர் டாக்டர்..ஜி.பவானி சிங் ஜி சிறப்பு விருந்தினரை வரவேற்று, நினைவு பரிசுகளை வழங்கி அவரை கௌரவித்தார், நம் வரலாறு, நம் போராட்டங்கள், நாம் மேற்க் கொண்ட நடவடிக்கைகள் மற்றும் நமது தமிழக மாநிலத்தில் நமது சமூகத்தை மேம்படுத்துவதற்கான உடனடி தேவை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.
2).நம் பொதுச் செயலாளர் திரு.ஜெ.பிரகாஷ் சிங் ஜி, நம் சமூகத்தின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக நம் வரலாற்றை விளக்கினார். நம் சங்கத்தின் செயல்பாடுகள், சாதனைகள், மேற்கொண்டுள்ள தொழில்நுட்ப முயற்சிகள் மற்றும் முன்னோக்கி செல்லும் எண்ணங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.
3).திரு.பரத் சிங் அவர்கள் விழா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்கள். திரு.பகவான் சிங் அவர்கள் சிறப்பு விருந்தினர் பற்றிய தகவல்களை பகிர்ந்தார்கள்.
4). மத்திய அமைச்சர் முன் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் பின்வருமாறு.
a).சமூக நலன்களைப் பெற நம் சமூகத்தை பிற்படுத்தப் பட்ட சிறப்பு பிரிவு அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்டவ் பிரிவில் சேர்த்தல்.
b) .செஞ்சியில் ராஜா தே சிங்குக்கு நினைவு மண்டபம் மற்றும் வெண்கல சிலை அமைத்தல்.
c) .ராணிப்பேட்டையில் ராணி பாய்க்கு நினைவு மண்டபம் மற்றும் வெண்கல சிலையை அமைத்தல்.
5.மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு.கஜேந்திர சிங் சேகாவத் அவர்கள் தனது முக்கிய உரையில், ஒரு ராஜ்புத் என்ற முறையில் அனைத்து ஆதரவையும் வழங்குவதாக உறுதியளித்தார். தனது அடுத்த தமிழக பயணத்தின் போது செஞ்சி மற்றும் ராணிபேட்டையை பார்வையிட விருப்பம் தெரிவித்தார்.
6).திருமலை திருப்பதி தேவஸ்தானம் வாரிய உறுப்பினர் (கர்நாடக அத்தியாயம்) மற்றும் கர்நாடகாவின் BREDAI அசோசியேஷனின் நிர்வாக குழு உறுப்பினர் திருமதி. கீதா ராம் மோகன் திருமலை பிரசாதம் மற்றும் பக்தி நினைவு பரிசுகளை சிறப்பு விருந்தினருக்கு வழங்கி கௌரவித்தார்கள்.
7).கூட்டம் நேர்மறையான எதிர்பார்ப்புகளுடன் முடிந்தது.
நம் இலக்கை அடையும் வரை, ஒற்றுமையுடன் செயல் படுவோம் ! ஒறுங்கிணைந்து வேலை செய்வோம் !!
நன்றி ! வணக்கம்.
ஜெ.பிரகாஷ் சிங்
பொது செயலாளர்,
தமிழ் நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்
————————————————————
Dear All,
A community function called “Snah Milan” is organised on 04.04.2021 at Hosur. Our Tamil Nadu Rajput Bondil Community is one of the major participants in the community gathering function.
Honourable Central Minister for Water Resources Shri.Gajendra Singh Shekhawat attended the function as Chief Guest. He is from our Rajput community. We have utilised the occasion and presented our community’s demands to him and requested his support for achieving our goals. Central Minister assured of his whole hearted support and promised to look in to it once the elections are over. He invited our President Dr.G.Bhavani Singh Ji to Delhi for further detailed discussions on mutually agreed date.
Major Highlights of the Event :-
1. Our President – Dr.G.Bhavani Singh Ji welcomed the Chief Guest, honoured him, highlighted our history, our struggles, our actions and immediate need for uplifting our community in our Tamil Nadu state.
2. Our General Secretary – Shri.J.Prakash Singh Ji, briefed the flash back history on support of our community’s demands. He also explained about functions of our association, achievements, our Technology initiatives and our way forward thoughts.
3. Shri.Bharat Singh Ji hosted the function. Shri. Bhagwan Singh Ji shared information about the special guest. 4.The following are the demands put up in front of the Central Minister.
a).To include our community either in the BC special or MBC category to get the social benefits.
b).Construct a memorial and bronze statue for Raja De Singh at Gingee.
c).Construct a memorial and bronze statue for Rani Bai in Ranipet.
5. Honourable Central Minister Shri.Gajendra Singh Shekhawat in his key address, promised of extending all support being a Rajput . He expressed his desire to visit Gingee and Ranipet during his next visit to Tamil Nadu.
6. Tirupathi Devasthanam Board Member (Karnataka Chapter) and Member of the Executive Committee of the BREDAI Association of Karnataka, Smt. Geeta Ram Mohan honored the Chief guest by presenting Tirumalai offerings and devotional souvenirs.
7. Function concluded with positive expectations.
Let us show our unity, work together, till we achieve our goal.
Thanks & Regards,
J.Prakash Singh
General Secretary, Tamil Nadu Rajput Bondil Association