செஞ்சி மாவீரன் இராஜா தேசிங் அவர்களின் மனைவி வீர மங்கை ராணி பாய் அவர்களின், 309 வது நினைவு தினம், மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் அறிவுறுத்தலின் படி ராணிபேட்டை பாலாற்றங்கரையில் ராணிபாய் உயிர் தியாகம் செய்த இடத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் சார்பாக 09.10.2023, திங்கட்கிழமை அன்று காலை 11 மணியளவில் நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. மகளிரணி நிர்வாகிகள் இராஜா தேசிங் – ராணி பாய் திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்தார்கள்.
எழுச்சிமிகு நினைவேந்தல் நிகழ்ச்சியில், தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மாநில துணை தலைவர்கள் – திரு.K.விஜயகுமார் சிங் (சென்னை), திரு.K.பிரேம் சிங் (வேலூர்), மாநில பொது செயலாளர் – திரு.J.பிரகாஷ் சிங் (சென்னை), மாநில பொருளாளர்- திரு.K.பாலாஜி சிங் (சென்னை), மாநில செயற்குழு உறுப்பினர்கள் – திரு.மேரு சிங் (வேலூர்), திரு.மணிராம் சிங் (வாலாஜாபேட்), வேலூர் மாவட்ட தலைவர் – திரு.G.தேவேந்திர சிங் (வேலூர்), வேலூர் மாவட்ட செயலாளர் -திரு.L.பிரகாஷ் சிங் (வாலாஜாபேட்), ஓசூர் கிளை தலைவர் – திரு.T.பாலாஜி சிங் (ஜெய்குரு) ஓசூர், மாநில மகளிரணி அமைப்பாளர் – திருமதி.D.ருக்மணி பாய் (தருமபுரி), மாநில மகளிரணி அமைப்பு செயலாளர் – திருமதி.A.அபிராமி அசோக் சிங் (ஓசூர்), மாநில இளைஞரணி துணை தலைவர் – திரு.M.ரவீந்திரநாத் சிங் (வாலாஜாபேட்), ஓசூர் மகளிரணி நிர்வாகிகள் – திருமதி.ஜான்சி பாய், திருமதி.கோகிலா பாய், திருமதி.கௌசல்யா பாய், ஓசூர் இளைஞரணி நிர்வாகி திரு.ஹரிஸ்குமார் சிங், வேலூர் மாவட்ட மகளிரணி ஒருங்கிணைப்பாளர் – திருமதி. பவானி தேசிங் (இளையநகரம்), வேலூர் -வாணியம்பாடி மகளிரணி நிர்வாகிகள், திருமதி.விஜயலட்சுமி பாய், திருமதி.கிருஷ்ணா பாய் , ராணிபேட்டை இளைஞரணி நிர்வாகி திரு.தினேஷ் சிங் (வாலாஜாபேட்), வேலூர் மாவட்ட மூத்த நிர்வாகி திரு.ரவீந்திரநாத் தாகூர் சிங்(ஆம்பூர்), மச்சம்பட் பகுதியை சேர்ந்த திரு.அமர்நாத் சிங், விண்ணமங்களம் பகுதியை சேர்ந்த திரு.சிவசங்கர் சிங்,வீரான்குப்பம் பகுதியை சேர்ந்த திரு.ஹரி சிங், திரு.ஈஸ்வர் சிங், மள்ளியம்பட்டு பகுதியை சேர்ந்த திரு.கோபால் சிங், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த திரு.ஜஸ்வந்த் சிங், செல்வன் கேசவ சிங், செல்வி.ஜெயஶ்ரீ பாய், செல்வி.பூர்வஜா பாய், வாலாஜாபேட் பகுதியை சேர்ந்த செல்வன். R.விஷ்வஜித் சிங், செல்வி.R.லோலிட்டா சிங் மற்றும் பல மாவட்டங்களிலிருந்து வந்திருந்த சொந்தங்கள் அனைவரும், வீரமங்கை ராணி பாய் அவர்களின் திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து, புஷ்பாஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்கள்.
வீர வணக்கத்திற்கு பின்னர் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் சார்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மகளிரணியின் சார்பாக ஓசூரை சேர்ந்த திருமதி.கோகிலா பாய், திருமதி.A.அபிராமி பாய் தங்களின் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள்.
மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங், மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் ஆகியோர் தலைமை சங்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை வரிசை படுத்தி பேசினார்கள்.
வேலூர் மாவட்டத்தின் சார்பாக திரு.மேரு சிங், திரு.ரவீந்திரநாத் தாக்கூர் சிங் தங்களின் ஆலோசனைகளை தெரிவித்தார்கள். நம் சமுதாய நல அறக்கட்டளை சிறப்புடன் வளர வேண்டும் என வாழ்த்து தெரிவித்து ஆம்பூர் திரு.ரவீந்திரநாத் தாக்கூர் சிங் அவர்கள் ருபாய் ஆயிரம் (Rs.1000/-) நன்கொடையினை நிகழ்ச்சியின் போது வழங்கினார்கள். வேலூர் மாவட்டத்தின் செயல்பாடுகளை திரு.பிரேம் சிங் அவர்கள் விளக்கி பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் நன்றிகள் தெரிவித்தார். ஆலோசனை கூட்டத்திற்கு முன்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த விருந்தினர்கள் அனைவரையும் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்கள்.
ராணி பாய் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியை அவர் உயிர் தியாகம் செய்த தினத்தன்று சிறப்புடன் நடத்தியமைக்கு, ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள், மற்றும் மகளிரணி நிர்வாகிகள் ஆகியோருக்கு தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்கத்தின் சார்பாக சால்வைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
சாமியானா பந்தல், சேர்கள் ஏற்பாடுகள் செய்து வந்திருந்த அனைவருக்கும் குடிநீர், காலை சிற்றுண்டி, தேநீர் வழங்கி அன்பான உபசரிப்புகள் அளித்த ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும், பம்பரமென சுழன்று பெரிய பங்களிப்பை வழங்கிய திரு.மணிராம் சிங் அவர்களுக்கும் தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வளர்க இராஜ தேசிங் – ராணி பாய் அவர்களின் புகழ் !
ஓங்குக இராஜபுத்திரர்களின் ஒற்றுமை !!
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்