Rani Bai 307th Memorial Day _ Ranipet _ 09.10.2021

Rani Bai 307th Memorial Day _ Ranipet _ 09.10.2021

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மகளிரணி சார்பாக வீரமங்கை ராணி பாய் அவர்களின் 307 வது நினைவு தினம் 1714 ஆண்டு அக்டோபர் மாதம் 9 ம் தியதி அன்று அவர் உடன்கட்டை ஏறி உயிர் தியாகம் செய்த ராணிபேட்டையில் இன்று (09.10.2021)கொண்டாடப்பட்டது.

நம் மாநில தலைவர் Dr.G.பவானி சிங், மாநில துணை தலைவர் திரு.S.இந்தர் சிங், மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், மாநில இணை செயலாளர் திரு.G.ஶ்ரீதர் சிங், மாநில உதவி செயலாளர் திரு.E.ராஜேந்தர் சிங், மாநில நிர்வாக குழு உறுப்பினரும், சட்ட ஆலோசகருமான திரு.K.யஷ்வந்த் சிங், மாநில நிர்வாக குழு உறுப்பினர் திரு.T.பாலாஜி சிங், மாநில மகளிரணி தலைவி திருமதி.ஷோபாராணி பாலாஜி சிங், மாநில இளைஞர் அணி தலைவர் திரு.சாய் பகவான் சிங், மாநில மகளிரணி துணை தலைவி திருமதி R.வசந்தி பாய், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திரு.தேவேந்திர சிங், செயலாளர் திரு. குபேந்திர சிங்,பொருளாளர் திரு.சரண் சிங், துத்திப்பட்டு கிளை தலைவர் திரு.பிரகாஷ் சிங், திரு.அர்ஜூன் சிங், திரு.கோபி சிங், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு. கஜேந்திர சிங், ஓசூர் தாலுகா பொருளாளர் திரு.சங்கர் சிங், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் திரு.அசோக் குமார் சிங்,வேலூர் மாவட்ட சொத்து பாதுகாப்பு குழு தலைவர் ராணிபேட்டை திரு.M.ரவீந்திரநாத் சிங், சிதம்பரம் திரு.ஜெகநாத் சிங், ஈரோடு மாவட்ட செயலாளர் திரு.பகவத் சிங், திருப்பூர் மாவட்ட செயலாளர் திரு.A.சந்தர் சிங், தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் திரு.G.பாலாஜி சிங்,VC மோட்டூர் கிளை உறுப்பினர்கள் திரு.சுரேன் சிங், வாலாஜா திரு.A.சங்கர் சிங், திரு.P.தினேஷ், மாஸ்டர் R.விஷ்வஜித், செல்வி R.லோலிதா, மாஸ்டர் S.சத்யன் சிங், கடலூர் திரு.ரவிசந்திரா சிங், திரு.ஜெய் சிங், வாலாஜா திருமதி.D.நித்யா தினேஷ் சிங்,ஆற்காடு திருமதி சாந்தி பாய், செல்வி கரிஷ்மா,செல்வி மயூரினி மற்றும் பல மாவட்டங்களிலிருந்து மரியாதைக்குரிய உறுப்பினர்கள் கலந்துக் கொண்டு ராணி பாய்க்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

TNRBA திருமண வரன் பற்றிய தகவல் அடங்கிய மின் இதழின் இரண்டாம் பதிப்பை மாநில துணை தலைவர் திரு.S.இந்தர் சிங், வேலூர் மாவட்ட தலைவர் திரு.கஜேந்திர சிங் ஆகியோர் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் மற்றும் இதர சமுதாய தலைவர்கள் முன்னிலையில் வெளியிட்டார்கள்.

ஆந்திர பிரதேச ராஜ்புத் பொந்திலி சங்க இயக்குனர் ஸ்ரீகாளஹஸ்தியைச் சேர்ந்த திருமதி.சுனிதா ஈஸ்வர் விழாவில் சிறப்புவிருந்தினராக கலந்து கொண்டார். TNRBA மகளிர் பிரிவு அவரை கவுரவித்தது.

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த திரு.ரவிந்திரநாத் தாகூர் சிங் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையின் கீழ் TNRBA யின் சாதனைகளைப் பற்றி உரை நிகழ்த்தினார் மற்றும் நம் சங்க எதிர்கால செயல்பாடுகளை பற்றியும் வெளிப்படுத்தினார். திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு. E.ராஜேந்தர் சிங் அவர்கள், ராணி பாய் பற்றி ஒரு கவிஅஞ்சலி செலுத்தினார்.

அன்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடிய திருமதி R. டில்லி பாய் ராஜேந்தர் சிங்கிற்கு அனைவரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

சிதம்பரம் கோவில் பிரசாதம், திரு.ஜெகன்நாத் சிங், திரு.G.ஸ்ரீதர் சிங், Dr.G.பவானி சிங், திரு.கஜேந்திர சிங், திரு.சாய் பகவான் சிங் திரு.யஸ்வந்த் சிங் சார்பாக அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மகளிரணி தலைவி திருமதி. ஷோபராணி பாலாஜி சிங்,ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்திற்கு 550 மதிய உணவுப் பொட்டலங்களை மூத்த சமூகத் தலைவர்கள் முன்னிலையில் வழங்கினார்.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.கஜேந்திர சிங் விழாவில் கலந்து கொண்ட அனைத்து சமூக உறுப்பினர்களுக்கும் ஹோட்டலில் மதிய உணவு ஏற்பாடு செய்தார்.

நிகழ்ச்சி குழு புகைப்படம் எடுத்த பிறகு முடிந்தது.

ராணி பாய்க்கு அஞ்சலி செலுத்த ராணிப்பேட்டை பாலாறு ஆற்றங்கரையில் திரண்ட அனைத்து சமூக நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை TNRBA வாழ்த்துகிறது.

TNRBA வின் சிறப்பு நன்றிகள் …

1) .திரு.M.ரவீந்திரநாத் சிங், திருமதி.R.வசந்தி பாய் – மலர் அலங்காரம் மற்றும் விழா ஒருங்கிணைப்பு பணிகளை செய்தமைக்கு.

2) .திரு.G.ஸ்ரீதர் சிங் அவர்கள் சாமியானா மற்றும் நாற்காலிகள் ஏற்பாடு செய்தமைக்கு.

3). திரு.ஜெகன்நாத் சிங், திரு.G.ஸ்ரீதர் சிங், Dr.G.பவானி சிங், திரு.கஜேந்திர சிங், திரு.சாய் பகவான் சிங், திரு.யஸ்வந்த் சிங் – சிதம்பரம் கோவில் பிரசாதம் அனைவருக்கும் வழங்கியமைக்கு.

4) .திரு.கஜேந்திர சிங் அனைவருக்கும் மதிய உணவை ஏற்பாடு செய்து விருந்தோம்பல் நிகழ்த்தியமைக்கு.

5). மகளிரணி தலைவி திருமதி. ஷோபராணி பாலாஜி சிங்,ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத்திற்கு மதிய உணவுப் பொட்டலங்களை வழங்கியமைக்கு.

6). திரு.J.பிரகாஷ் சிங்- ராணி பாயின் நினைவு நாளில் TNRBA திருமண வரன் புத்தகத்தை வெளியிடுவதற்கான அவரது உறுதிப்பாட்டிற்காக.

7) .திரு.சாய் பகவான் சிங், திரு.R.கார்த்திக் மற்றும் இளைஞர் அணியிணர் – சமூக ஊடக பதிவு செலவுகளை ஏற்றமைக்கு.

8). தமிழ்நாட்டில் ராஜ்புத் பொந்தில் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக நம்மை முன்னோக்கி நகர்த்தச் செய்யும் சமூகத்தின் முதன்மை இயக்கி எங்கள் அன்புத் தலைவர் Dr.G. பவானி சிங்கிற்கு பெரிய நன்றி..

ஜெய் ராஜ்புத் பொந்தில்ஸ் …

J.பிரகாஷ் சிங்
மாநில பொது செயலாளர்,
தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்.
நாள்:09.10.2021