இராஜபுத்திர குல மாவீரன் செஞ்சி இராஜா தேசிங் அவர்களின் 309 வது நினைவு தினம், அவர் உயிர் நீத்த இடம் அமைந்துள்ள செஞ்சியை அடுத்த கடலியில், TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 03.10.2023 காலை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
TNRBA மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், TNRBA மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங், TNRBA மாநில பொருளாளர் திரு.K.பாலாஜி சிங், TBRBA விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு.M.R.ரவிச்சந்திரன் சிங் (கடலி ஒன்றிய உறுப்பினர்), TNRBA மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.M.U.பிரசன்னா @M.U.பிரதாப் சிங், ஓசூர் கிளை சங்க தலைவர் திரு.T.பாலாஜி சிங், பொருளாளர் திரு.N.L.சங்கர் சிங், நிர்வாகிகள் திரு.அப்பு சிங், திரு.தர்மு சிங், திரு.சிவகுமார் சிங், ஆகியோர் இராஜா தேசிங் உயிர் நீத்த இடத்தில் பூஜைகள் செய்து திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக, மேல்மலையனூர் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி.வெ.கண்மணி நெடுஞ்செழியன், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான திரு.L.P. நெடுஞ்செழியன், கடலி ஊராட்சிமன்ற தலைவர் திரு.L.பெருமாள், கடலி ஊராட்சிமன்ற துணை தலைவர் திரு.யூசுப் அலி, இராஜ்புத் சமுதாயத்தை சேர்ந்த மஹாராஷ்டிரா மாநிலம் ஜல்காம் பகுதியை பூர்விகமாக கொண்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் Dr.நர்சிங் பரதேசி, உதவி வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு.ஹர்சல் மகாஜன், மத்திய பிரதேசம் பொந்தேல்கண்ட், டாடியா பகுதியை பூர்விகமாக கொண்ட வரலாற்று ஆராய்ச்சியாளர் திரு.ராக்கேஷ் வியாஷ், கர்நாடக மாநில இராஜ்புத் அமைப்பை சேர்ந்த திரு.பாலாஜி சிங் , அண்ணமங்கலம் தலைமை ஆசிரியர் ஓய்வு திரு.N.முனுசாமி மற்றும் கடலி வாழ் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
ராஜா தேசிங் அவர்களின் 309 வது நினைவு தினத்தை சிறப்புடன், மிகவும் எழுச்சிமிக்க வகையில், நடத்திய TNRBA விழுப்புரம் மாவட்ட கிளையை தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் வாழ்த்தி, பாராட்டுகிறது.
வளர்க ராஜா தேசிங் புகழ் !
ஓங்குக இராஜபுத்திரர்களின் ஒற்றுமை !
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்.