Lakshmi Kubera Pooja _ South Chennai 24.12.2023

Lakshmi Kubera Pooja _ South Chennai 24.12.2023

24.12.2023 அன்று நடைபெற்ற லக்ஷ்மி குபேர பூஜை பற்றிய தொகுப்பு

தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில், தென் சென்னை கிளை சங்கத்தின் சார்பாக நம் சமுதாய நலனுக்காக லக்ஷ்மி குபேர பூஜை 

TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் நல்லாசியுடன் இன்று காலை 10 மணியளவில் சென்னை மேற்கு மாம்பலம் VMA மண்டபத்தில் பண்டிதர்கள் வேதம் முழங்க மிக சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது. 

TNRBA மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங், TNRBA ஒருங்கிணைந்த வட சென்னை, திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.B.K.பாலாஜி சிங், மாநில இளைஞரணி இணை செயலாளர் திரு.D.சுதேஷ் சிங், தென் சென்னை மாவட்ட ஆலோசகர் திரு.D.சதீஷ் சிங், மாவட்ட மூத்த உறுப்பினர்கள் திரு.மகேஷ் குமார் சிங், திரு.பூபால் சிங் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். 

வட சென்னை, தென் சென்னை, தென் சென்னை புறநகர் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்து  நம் சமுதாய மக்கள் பெரும் திரளாக அரங்கம் நிரம்ப குடும்பத்தினருடன் வந்திருந்து லக்ஷ்மி குபேர பூஜையில் கலந்துக் கொண்டு சுவாமியின் அருளை பெற்றார்கள். பூஜை 12 மணியளவில் மங்களகரமாக நிறைவு பெற்றது.

பின்னர் சமுதாய கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. தென் சென்னை மாவட்ட தலைவர் Dr.M.கோவர்த்தன சிங் தலைமையேற்று பேசினார். பூஜை அழைப்பையேற்று குடும்பத்தாருடன் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தமைக்கு நன்றி தெரிவித்து, வருங்காலத்திலும் தொடர்ந்து ஆதரவு தரும் படி கேட்டுக் கொண்டார்.

தென் சென்னை மாவட்ட துணை தலைவர் திரு.மஞ்சுநாத் சிங்,

மாவட்ட செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமாகிய திரு.மகேந்திரநாத் சிங்,

மாவட்ட இணை செயலாளர் திரு.கணேஷ் சிங,

மாவட்ட பொருளாளர் திரு.பீம் சிங் ஆகியோர்

சமுதாய நலன் சார்ந்த தங்கள் கருத்துக்களை எடுத்துரைத்தார்கள். பூஜை சிறப்புடன் நடைபெற மாநில மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.G.ராஜேஷ்வரி சிங் அவர்கள் அளித்த பங்களிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.

TNRBA மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையில் சமீப கால சங்க செயல்பாடுகளை பற்றி சுருக்கமாக விளக்கினார்கள். குறிப்பாக அண்மையில் வந்த சங்க நீதிமன்ற தீர்ப்பு, சமுதாய நல அறக்கட்டளையின் செயல்பாடுகள், திருமண வரன் சேவை மையம், சமுதாய கல்வி வேலைவாய்ப்பு  குழு, சமுதாய மருத்துவ ஆலோசனை உதவி மையத்தின் செயல்பாடுகளை விவரித்து ஆதரவு கோரினார்.

TNRBA மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங் அவர்கள் வாழ்த்துரை நிகழ்த்தி, தென் சென்னை மாவட்ட தலைவர் Dr.M.கோவர்த்தன சிங், மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் ஆகியோருக்கு சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்கள்.

வட சென்னை – திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.B.K.பாலாஜி சிங் அவர்கள், சங்கம் – சமுதாய மக்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்கள்.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் சமுதாய மக்கள் நூற்றுக்கணக்கில் குடும்ப சகிதம் திரளாக பூஜையில் கலந்துக் கொண்ட மன நிறைவுடன், குழு புகைபடத்துக்கு பின்னர் கலலந்தாய்வு கூட்டம் நிறைவு பெற்றது.

லக்ஷ்மி குபேர பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் தென் சென்னை மாவட்டத்தின் சார்பாக நாவிற்கினிய மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்கம், லக்ஷ்மி குபேர பூஜை விழாவை வெகு சிறப்பாக நடத்தியமைக்கு, TNRBA தென் சென்னை மாவட்ட கிளைக்கு  வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. சமுதாய மக்களை ஒருங்கிணைக்கும் இது போன்ற ஆன்மீக நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தி, சமுதாய வளர்ச்சிக்கு மாவட்ட கிளைகள் உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். 

TNRBA மாநில பொது செயலாளர், 

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம். 

25.12.2023