





















அனைவருக்கும் வணக்கம்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை 07.03.2021 அன்று நம் மாமன்னர் ராஜா தேசிங்கு அவர்களின் துணைவியார் மஹாராணி ராணி பாயின் நினைவிடம் அமைந்துள்ள ராணிப்பேட்டையில் சர்வதேச மகளிர் தின விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் தன்னலமற்ற நம் மாநில தலைவர் மரியாதைக்குரிய
டாக்டர் ஜி.பவானிசிங் ஜி, உப தலைவர் திரு.S.இந்தர் சிங் ஜி, உப தலைவர். திரு.V.சுரேஷ்பாபு சிங் ஜி,,
பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் ஜி, இனை செயளாலர்.திரு.G.ஸ்ரீதர் சிங் ஜி,
உதவி செயளாலர் திரு.E.ராஜேந்தர் சிங், ஜி, சட்ட ஆலோசகர் திரு.K.யஷ்வந்த் சிங் ஜி, மற்றும் தென்சென்னை மாவட்ட தலைவர் திரு K.நாகேஷ்வர்சிங் ஜி, வேலூர் மாவட்ட தலைவர் திரு.தேவேந்திர சிங் ஜி, திருவண்ணாமலை மாவட்டம் திரு.சீத்தாராம்சிங் ஜி, திரு.B.யுவராஜ் சிங் ஜி வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர், ஓசூர்; வேலூர்; கோவை; திருச்சி; திருப்பூர்; ஈரோடு; திருவண்ணாமலை; கடலூர்; நாமக்கல்; திருவள்ளூர், வடசென்னை, தென் சென்னை , தென் சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட மகளிர் அணி, இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சர்வதேச மகளிர் தின விழாவில் மகளிரை மதித்து கௌரவ படுத்தும் விதமாக மாநில மகளிரணியை மேடையில் அமர்த்தி விழாவை துவக்கிய நம் தலைவர்களின் பெருந்தன்மைக்கு தலை வணங்குகிறோம்.
இந்த விழாவிற்க்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்ட தென்சென்னை புறநகரை சேர்ந்த திரு.R.ஜெயசந்தர் சிங் ஜி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.கஜேந்தர் சிங் ஜி அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
நம் சமுதாய பெண் இனத்தைப் பெருமை படுத்தும் விதமாக ஐரோப்பிய நாட்டின் ஜியார்ஜியா மாகாணத்தில் டிபிலிசியில் உள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் மருத்துவப் பட்ட படிப்பை முடித்து நம் நாட்டில் மருத்துவ பணியை மேற்கொள்ள இருக்கும் குமாரி. மோகன ப்ரியா ஸ்ரீதர் சிங் அவர்களை கௌரவித்து மகிழ்ந்தோம். அவரது ஆற்றல் மிக்க பேச்சு சிந்தனையை தூண்டும் விதமாக இருந்தது.
இவ்விழாவில் கலந்து கொண்ட ஆடவர் பெண்கள் அனைவரும் தம் உரையில் பெண்மை மற்றும் தாய்மையை பற்றி பேசி அனைவரையும் நெகிழச் செய்தனர்.
நம் குல மாதர்களுக்காக நடத்திய இவ்விழாவிற்க்காக நிதி உதவி அளித்து உதவிய நல் உள்ளங்களுக்கு நன்றிகள் பல பல
மேலும் பிற மாவட்டங்களில் இருந்து இவ்விழாவில் கலந்து கொள்ளும் ஆர்வத்தில் தனியாக பிரயாணம் செய்து வந்த பெண்களை பாராட்டியே ஆக வேண்டும். பிற மாவட்டத்திலிருந்து வந்த பெண்களை தன் இல்லத்தில் தங்க வைத்து உபசரித்த ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த மாநில மகளிரணி உப தலைவி திருமதி வசந்தி ரவிந்தரநாத் சிங் அவர்களுக்கு நன்றி.
கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அனைவரையும் உற்சாகபடுத்தி, நடத்தி கொடுத்த கோவை திரு.மோகன் சிங் ஜி, ஓசூர் அஷோக் சிங் ஜி, ஈரோடு பகத் சிங் ஜி, நாமக்கல் ஜெகதீஸ்வர் சிங் ஜி. திருப்பூர் சந்தர் சிங் ஜி , அமர்நாத் சிங் ஜி, தென் சென்னை புறநகர் ரவிச்சந்தர் சிங் ஜி, விக்ரம் சிங் ஜி, வடசென்னை B.K. பாலாஜி சிங் ஜி அவர்கள் இவ்விழாவை மிகவும் கோலாகலமாக்கினர்.
கடந்த ஒரு மாதமாக இவ்விழாவின் ஏற்பாட்டிற்க்காக இரவு பகல் பாராது ஒத்துழைப்பு கொடுத்த மாநில, மாவட்ட மகளிரணி சகோதரிகள் திருமதி வசந்தி ரவிந்ரநாத் சிங் ஜி, திருமதி. A.காஞ்சனா ஜி ,புதுக்கோட்டை திருமதி.B.நிரஞ்ஜனி தேவி ஜி ,சென்னை, திருமதி G.K.லக்ஷ்மா பாய் ஜி ஈரோடு,திருமதி S.பானுமதி ஜி, கடலூர்,, திருமதி.A.அபிராமி ஜி ஓசூர், திருமதி B.பத்மினி பாய் ஜி திருச்சி மற்றும் திருமதி.ஜனனி பாய் நாமக்கல் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
ஒரு சில தடை மற்றும் இடர்ப்பாடுகளுக்கிடையே இவ்விழாவினை மிகவும் வெற்றிகரமாக நடத்தி கொடுத்த நம் சங்க தலைவர்கள். நிர்வாகிகள் அனைவருக்கும்
நன்றி ! நன்றி !! நன்றி !!!
இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இன்று தாங்கள் மிகவும் மகிழ்ச்சி யோடு இருந்ததாக மிகவும் நெகிழ்ச்சியோடு தெரிவித்து கொண்டதே இவ்விழாவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறோம்.
உள்ளூரில் நடைபெற்ற மகளிர் தின விழாவிற்கு பெருமளவில் உதவி தன்னுடைய பொன்னான நேரத்தை செலவிட்டு விழாவை நடத்த சிறந்த இடத்தையும் சுவையான உணவையும் தேர்வு செய்து தந்த ராணிப்பேட்டை திரு மோ.ரவீந்திரநாத்சிங் ஜி அவர்களையும் பாராட்ட கடமைப் பட்டுள்ளோம். பெருந்திரளான எண்ணிக்கையில் கூடினர் என்று கூறுவதை விட பெருந்திரளானோர் மகிழ்ச்சி அடைந்தனர் என்பது தான் பெருமை.
இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்த அனைத்து நல் உள்ளங்களுக்கு
மாநில மகளிரணி சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள் கோடி…!!
திருமதி.சோபா ராணி பாலாஜி சிங்
மாநில மகளிரணி தலைவி