ஓசூரில் நடந்த முப்பெரும் விழா பற்றிய தொகுப்பு 18.09.2022

ஓசூரில் நடந்த முப்பெரும் விழா பற்றிய தொகுப்பு 18.09.2022

18.09.2022 அன்று ஓசூரில் நடந்த முப்பெரும் விழா பற்றிய தொகுப்பு .

அனைத்து ராஜபுத்திர சொந்தங்களுக்கும் எங்கள் வணக்கங்கள்.

நம் மனிதநேய மிக்க, பாசமிகு தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்க மாநில தலைவர் Dr.G.பவானி சிங் ஜி அவர்களின் அன்பு வேண்டுகோளுங்கிணக்க

1).தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் 4வது மாநில பொது குழு கூட்டம்,

2).உறவுகளின் சங்கம குடும்ப விழா,

3).இலவச கல்யாண கேந்திரா ⁃ ஆகிய முப்பெரும் விழாக்களில் 

கலந்துக்கொள்ள, மாநிலத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் சுமார் 1900 க்கு மேற்பட்ட  உறவுகள், கார், வேன், பஸ்கள், மூலம் பவானிஸ் கிராண்ட் பேலஸ் வந்து அரங்கை திக்குமுக்காட வைத்து விட்டார்கள்.

காலை சிற்றுண்டிக்கு பிறகு, 9.30 மணியளவில் இறை வணக்கத்துடன் விழா துவங்கியது. 

கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.B.கஜேந்திர சிங் அவர்கள், வரவேற்புரை நிகழ்த்தி, சிறப்பு விருந்தினர்களையும், நிர்வாக குழு உறுப்பினர்களையும் ராஜாதேசிங், ராணிபாய் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி  செலுத்தி மேடைக்கு வரும் படி கேட்டுக்கொண்டார்.

மேடையை அலங்கரித்த சமுதாய தலைவர்கள் அனைவரையும் , மகளிரணியினர் மாலைகள் அணிவித்து, சால்வைகள் போர்த்தி, நினைவு பரிசுகள் கொடுத்து கௌரவித்தார்கள். மறைந்த சமுதாய தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவருக்கும் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

திருமதி.விஜயா பவானி சிங் மற்றும் இதர முக்கிய மகளிரணி நிர்வாகிகள் குத்து விளக்கை ஏற்றியவுடன் மங்களகரமாக விழா முறைப்படி துவங்கியது.

முதன்மை சிறப்பு விருந்தினர்கள், TNRBA மாநில கௌரவ தலைவர் – திரு.J.மோகன் சிங், பெருந்துறை, திரு.K.கிருஷ்ணா சிங், VAO retd., வேதகரம் ஜமீன்தார், ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

அடுத்து மாநில பொது செயலாளர் -திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள், சங்கத்தின் சாதனைகள், அடுத்த கட்ட வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், எதிர்கால திட்டங்கள் பற்றி விரிவுரை நிகழ்த்தினார்கள்.

தொடர்ந்து, மாநில துணைதலைவர்கள், திரு.K.விஜயகுமார் சிங், திரு.V.சுரேஷ் பாபு சிங்,  திரு. K.பிரேம் சிங் ஆகியோர் சங்க வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான அவசியத்தை வலியுறுத்தி பேசினார்கள்.

அடுத்து, விழாவின் முதன்மை சிறப்பு விருந்தினர்கள், TNRBA மாநில கௌரவ தலைவர் – திரு.J.மோகன் சிங், பெருந்துறை, திரு.K.கிருஷ்ணா சிங், VAO retd., வேதகரம் ஜமீன்தார், ஆகியோரின் திருகரங்களால்,  “தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சமுதாய திருமண தகவல் மின் இதழ், பதிப்பு -6” வெளியிடப்பட்டது.  தொடர்ந்து, மாநில இணை செயலாளர்-திரு.R.குலாப் சிங்,  உதவி செயலாளர்-திரு.E.ராஜேந்திர சிங் ஆகியோர் சோதனைகளை சாதனைகளாக்க தலைமை சங்க நிர்வாகிகள் மேற்கொள்ளும் அர்பணிப்புகள் பற்றி விவரித்தார்கள்.

செயற்குழு உறுப்பினர் Dr.R.லட்சுமண சிங் அவர்கள், தமிழ்நாடு ராஜபுத்திர சமூத்தினரை பற்றி தாம் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சி கட்டுரை, திருமண தகவல் மின் இதழின் உருவாக்கத்தில் உள்ள தொழில்நுட்பம், சிரமங்கள், பயன்கள் பற்றி விபரமாக எடுத்துரைத்தார்கள்.

செயற்குழு உறுப்பினர்கள் திரு.L.ரகுநாத் சிங், திரு.K.மேரு சிங், திரு.மணிராம் சிங், மாநில மகளிரணி அமைப்பாளர்  திருமதி.D.ருக்மணி பாய், அமைப்பு செயலாளர் திருமதி. அபிராமிபாய், சிறப்பு விருந்தினர்கள் மதுரை  திரு.B.மதன கோபால், திருச்சி திரு.B.துளசிராம் சிங் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

சமுதாயத்தின் மூத்த உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் மேடையில் அழைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் தனது தலைமை உரையின் போது, 17.09.2022 அன்று நடந்த செயற்குழு கூட்டத்தில் நடந்த விவாதங்கள், தீர்மானங்கள் பற்றி விளக்கினார்கள். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள செயற்குழு உறுப்பினர்களையும், நிர்வாக குழு உறுப்பினர்களையும் அறிமுகப்படுத்தினார்கள். செயற்குழு தீர்மானங்களுக்கு ஒப்புதலும் பெறப்பட்டது.

மாநில தலைவர், சமுதாய மேம்பாட்டுக்காக தாம் எடுத்து வரும் நடவடிக்கைகள், மத்திய -மாநில அரசுகளின் கவனதுக்கு எடுத்து சென்றுள்ள விபரங்கள், சங்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் செய்து வரும் செயல்கள் பற்றி விவரித்தார்கள். அவரின் எழுச்சியுரை, சமுதாய மக்களுக்கு புது தெம்பையும், நம்பிக்கையும், புத்துணர்வையும் பாய்ச்சுவதாக இருந்தது.

1900 க்கும் அதிகமான பேருக்கான மெகா மதிய விருந்து சுவையுடனும், எவ்வித குறையுமின்றி அமைதியுடனும் முடிந்த பின்னர், மதியம் 2.30 மணி முதல் மகளிரணி சார்பாக கலை நிகழ்ச்சிகளும், அதே நேரத்தில் தனி அரங்கில் கல்யாண கேந்திரா நிகழ்ச்சியும் துவங்கியது.

மகளிரணி சார்பாக நடத்தப்பட்ட கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு போட்டிகள்  பிரமிப்பூட்டும் வகையில் அமைந்திருந்தது. மிகவும் நேர்த்தியாகவும், சரியான முறையில் திட்டமிட்டும், புதுமையாகவும் திறம்பட நடத்தினார்கள். இத்தனை திறமைகளை மகளிரணியினர் இத்தனை காலம் எப்படி தங்களுக்குள் பூட்டி வைத்திருந்தார்கள் என்ற கேள்வியே அனைவரது மனதிலும் எழுந்தது.  விருந்தினர்களை வரவேற்றது, கௌரவித்தது, நினைவு பரிசு பொருட்களை தேர்ந்தெடுத்த விதம் எல்லாவற்றிலுமே அவர்களின் செயல்பாடு டாப் ரேங். 

மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி.D.ருக்மணி பாய், மாநில மகளிரணி அமைப்பு செயலாளர் திருமதி.A.அபிராமி பாய், மாநில மகளிரணி துணை அமைப்பாளர்கள் திருமதி.A.காஞ்சனா பாய், திருமதி.R.வசந்தி பாய், ஓசூர் மகளிரணி அமைப்பாளர் திருமதி.பாக்யா பாய், செயலாளர் திருமதி.இந்துமதி பாய், துணை அமைப்பாளர்கள் திருமதி.S.ஜான்சி பாய், திருமதி.P.கோகிலா பாய், இவர்களுடன் கைகோர்த்த மாநில மகளிரணி நிர்வாகிகள், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் ஆகியோரை எவ்வளவு போற்றினாலும், வாழ்த்தினாலும் அது தகும். நீங்கள் இதுவரை செய்யாத சாதனைகளை நிகழ்த்தியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

வெற்றி பெற்றோர், சாதனை புரிந்தோர் அனைவருக்கும் மகளிரணி சார்பில் பரிசுகளை மாநில தலைவர், செயலாளர் மற்றும்  இதர முக்கிய நிர்வாகிகள் வழங்கினார்கள்.

விழா நிகழ்ச்சிகளை மாநில இளைஞரணி அமைப்பு செயலாளர் திரு.R.கார்த்திக் சிங் மிகவும் அருமையாகவும், நேர்த்தியாகவும், அனைவரும் பாராட்டும் வகையில் தொகுத்து வழங்கினார்கள்.

அவருக்கும் வாழ்த்துக்கள்.

திரு.B.ஜெயக்குமார் சிங் அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.

கல்யாண கேந்திரா நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. சுமார் 165 வரன்கள் பதிவு செய்யப்பட்டன. இவை அனைத்தும் மின் இதழில் பதிவேற்றம் செய்யபட்டு விரைவில் வெளியிடபடும். 

பல்வேறு மாவட்ட கிளை சங்கங்கள், ஓசூர் கிளை சங்கத்திற்கு Rs.92,350/- நன்கொடைகளை வழங்கினார்கள். அவர்களின் ஆதரவிற்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

அது போல, தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சமுதாய நல அறக்கட்டளைக்கு, சென்னை மதுரைவாயிலை சேர்ந்த திரு.D.சுதேஷ் சிங், Rs.25,000/-, சென்னை தாம்பரத்தை சேர்ந்த திரு.T.ஹரிநாத் சிங், அவர்கள் Rs.5000/-, ஈரோடை சேர்ந்த திரு.கஜேந்திர சிங் அவர்கள் Rs.1000/-நிதியுதவி வழங்கி அறக்கட்டளை வளர்ச்சிக்கு  உதவி செய்தார்கள். அவர்களுக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

ஓசூர் குடும்ப விழாவை சிறப்பாக்க கிளை சங்க தலைவர் 

திரு.B.இந்தர் சிங் அவர்கள் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அவரின் அறிவுறுத்தலின் படியும், தலைவரின் வழிகாட்டுதல்களின் படியும், வருவோருக்கு அவர்களின் தேவைக்கேற்ப தங்கும் வசதிகளை அரங்கிலும், ஹோட்டலிலும் இரவு பகல் பாராது ஏற்பாடுகள் செய்து தந்த திரு.T.பாலாஜி சிங், அவருக்கு துணை நின்ற திரு.சசிகுமார் சிங் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுதல்களும்.

அரங்க விழா ஏற்பாடுகளை திறம் பட செய்த ஓசூர் நிர்வாகிகள் திரு.N.L.சங்கர் சிங், திரு.B.ஜெய்குமார் சிங், திரு.M.அசோக் குமார் சிங், திரு.K.ஹனுமான் சிங் ஆகியோருக்கும் துணைபுரிந்த இதர நிர்வாகிகளுக்கும் நன்றிகளும், பாராட்டுதல்களும்.

நம் தலைவரின் உபசரிப்பு எண்ணத்திற்கேற்ப, நாவிற்கினிய சுவையான உணவு, எண்ணிக்கைகள் ஏறினாலும் அதைப்பற்றி  சற்றும் கலங்காமல் குறித்த சமயத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்த திரு.B.பகவான் சிங் அவர்களுக்கு நன்றிகளும், பாராட்டுதல்களும்.

முப்பெரும் விழா, நம் சமுதாய வரலாற்றில் மற்றுமொரு மைல்கல். தரைதளம் நிரம்பி, முதல் தளத்தில் இருக்கைகள் போடப்பட்டது இதுவரை நாம் கண்டிராதது. 

பவானிஸ் பேலஸின் மைய அரங்கம், கூட்டத்தின் போதும், கலை நிகழ்ச்சியின் போதும், கல்யாண கேந்திராவின் போதும் காலை முதல் மாலை வரை நிரம்பியிருந்தது சமுதாய மக்கள் சங்கத்தின் மேல் கொண்டுள்ள மதிப்பு, நம்பிக்கை, எதிர்பார்ப்பை பிரதிபலிப்பதாக இருந்தது. 

விழா பேச்சுக்களில் அன்பு இருந்தது வன்மம் இல்லை, கட்டுபாடு இருந்தது, சல சலப்புகள் இல்லை, ஒற்றுமை இருந்தது, வேற்றுமை இல்லை.

விழா மாபெரும் வெற்றியடைய காரணமாக இருந்த மாநில தலைவர் Dr.G.பவானி சிங், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.B.கஜேந்திர சிங், ஓசூர் கிளை தலைவர் திரு.B.இந்தர் சிங், மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில மகளிரணி நிர்வாகிகள், மாநில இளைஞரணி நிர்வாகிகள், அனைத்து மாவட்ட கிளை சங்க நிர்வாகிகள், கல்யாண கேந்திரா வரன் பதிவு அரங்க உறுப்பினர்கள். வீடியோ மற்றும் புகைப்படம் ஸ்பான்சர் செய்துதவிய திரு.R.அர்சுன் சிங், ஶ்ரீபவானி ஸ்டுடியோஸ், ஓசூர் மற்றும் விழாவிற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவோ உதவியவர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் தன்னுடைய நன்றிகளை உள்ளத்தின் அடிமனதிலிருந்து தெரிவித்துக்கொள்கிறது. அது போல ஏதேனும் பெயர்கள் குறிப்பிட மறந்திருந்தால் மன்னித்தருளவும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Dr.G.பவானி சிங் என்கிற ஒப்பற்ற தலைவரின் கீழ் வலுமையான அமைப்பை புதுப்பித்து விட்டோம். அவரது கரங்களை வலுபடுத்த அனைவரும் சபதங்கள் எடுத்து விட்டோம். இனி வெற்றி நிச்சயம்.

நேற்றும் நமதே !இன்றும் நமதே !நாளையும் நமதே !

பவானி மாத்தா என்றும் நம் சமுதாய மக்களுக்கு துணை இருப்பாள்.

நன்றி, வணக்கம் .

J.பிரகாஷ் சிங்

TNRBA மாநில பொது செயலாளர்.