TNRBA 2023 – மாநில பொது குழு கூட்டம், குடும்ப விழா பற்றிய தொகுப்பு
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் 29.07.2023 அன்று மாலை 7 மணியளவில், ஓசூர் பவானிஸ் கிராண்ட்பேலஸ் அரங்கில் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. மொத்தமுள்ள 27 செயற்குழு உறுப்பினர்களில் 26 பேர் கலந்துக் கொண்டார்கள்.
மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் அனைவரையும் வரவேற்று தலைமையுரை நிகழ்த்தினார்கள். நம்முடைய தொடர் முயற்ச்சியால் செஞ்சி ராஜா தேசிங் மணி மண்டபம், ராணிபேட்டை ராணி பாய் மணி மண்டபம் ஆகியவற்றில் அடைந்து வரும் முன்னேற்றம் பற்றி எடுத்துரைத்தார்கள்.
மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், அவர்கள் சங்கத்தின் வருடாந்திர பதிவு யாவும் புதிக்கபட்டு விட்டதை தெரிவித்தார். மேலும் நடப்பு ஆண்டின் வரவுசெலவு கணக்குகளை சமர்பித்து செயற்குழுவின் ஒப்புதல்களை பெற்றார்.
சங்கத்திற்கு வங்கி கணக்கு துவக்குதல், செஞ்சியில் ராஜா தேசிங் மணி மண்டபம், ராணிப்பேட்டையில் ராணி பாய் மணிமண்டபம் அமைத்தல், நமது சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தல் ஆகியவற்றை செயல்படுத்த அரசாங்கத்தை வலியுறுத்துகின்ற நம்முடைய முயற்ச்சிகளை தொடர்ந்து முன்னெடுத்தி செல்லுதல், சங்கத்தின் வளர்ச்சியை மேலும் அதிகப்படுத்திட நடவடிக்கை எடுத்தல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இரவு உணவுக்கு பிறகு கூட்டம் நிறைவு பெற்றது.
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மாநில பொது குழு கூட்டம் 30.07.2023 அன்று காலை 10 மணியளவில், ஓசூர் பவானிஸ் கிராண்ட்பேலஸ் அரங்கில் துவங்கியது.
நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்கள் இராஜா தேசிங் ராணி பாய் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்திய பின்னர் மேடைக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டார்கள். மகளிரணியினர் குத்து விளக்கு ஏற்றிய பின்னர் தமிழ் தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. உயிர் நீத்த சமுதாய மக்களுக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாநில துணை தலைவர் திரு.B.கஜேந்திர சிங் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். மாவட்ட தலைமை நிர்வாகிகள் மேடைக்கு அழைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.
மாநில கௌரவ தலைவர் திரு.J.மோகன் சிங் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்கள். மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையில் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கம் மிக சிறப்பாக செயல்படுவதாக பாராட்டினார்.
சமுதாய நல திட்டங்களை செயல் படுத்த நிதி ஆதாரம் அவசியம் என்பதை வலியுறுத்தி அனைவரும் முன்வந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொண்டார். அத்துடன் குடும்ப விழா நிகழ்ச்சிக்கு Rs.25,000/-. அறக்கட்டளை வளர்ச்சி நிதிக்கு Rs.25,000/- நன்கொடையாக வழங்கினார்கள்.
பின்னர் மாநில இணை செயலாளர் திரு.R.குலாப் சிங் அவர்கள் சமுதாய இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய குறிப்பு, அரசாங்க முக்கிய பணிகளில் நமது சமுதாயத்தினர் இடம் பெற வேண்டியதின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
மாநில மகளிரணியின் சென்னை ஓருங்கிணைப்பாளர் திருமதி.D.நளினி பாய் அவர்களின் மகன் திரு.சுதேஷ் சிங் அவர்கள் Rs.25,000/- நன்கொடையினை சமுதாய அறக்கட்டளை வளர்ச்சி நிதியாக தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் வழங்கினார்கள்.
அடுத்து மாநில உதவி செயலாளர் திரு.E.ராஜேந்திர சிங் அவர்கள், வரனை TNRBA திருமண தகவல் மையத்தில் பதிவு செய்தவர்கள், திருமணமான பின் அந்த தகவல்களை தெரிவிப்பதில்லை அதனால் ஏற்படும் சிரமங்களை பற்றி எடுத்துரைத்தார்கள்.
பின்னர் முன்னாள் மாநில பொது செயலாளர் திரு.B.ஜெயச்சந்திரன் சிங் அவர்கள், அவர் நடத்தி வரும் K.A.S.M.G.R அறக்கட்டளை பற்றியும், மாணவ – மாணவியர்களின் படிப்புக்காக நிதி உதவி அளித்து வருவதை பற்றியும் கூறினார்கள். நம் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கம் பல்வேறு ஆக்கபூர்வமான செயல்களை மிக சிறப்பாக செய்து வருவதாக பாராட்டினார்கள். சமுதாய அறக்கட்டளைக்கு Rs 25,000/- ஐ காசோலையாக வழங்கினார்.
அதனை தொடர்ந்து, மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள், சங்கத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்கள். செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்ட நடப்பு ஆண்டின் வரவுசெலவு கணக்குகளை விளக்கி பொது குழுவின் ஒப்புதல் பெற்றார். 2022-2023 ஆம் ஆண்டின் சங்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டார். இராஜா தேசிங் – ராணி பாய் ஆகியோரின் திருவுருவ சிலை, மணி மண்டபம் சம்பந்தமாக அரசாங்கத்திடம் TNRBA மேற்கொண்ட நடவடிக்கைகளை விளக்கினார். சமுதாய அறக்கட்டளையின் செயல்பாடுகள், கிடைத்த நன்கொடைகள், செய்த நல உதவிகள், வங்கியில் செய்துள்ள முதலீடுகள், வரவுசெலவு கணக்குகள் ஆகியவற்றை தெரியபடுத்தினார். அறக்கட்டளை முதலீடு அதிகரிக்க அனைவரின் அன்பளிப்புகளை கோரினார். நேற்று நடந்த செயற்குழு கூட்டத்தில் இது பற்றி விவாதித்த போது 11 செயற்குழு உறுப்பினர்கள் மாதம் Rs.1000/- நிதியுதவி வழங்க முன் வந்து அதற்கான முதல் மாத தவணை தொகையை கூட்டத்திலேயே வழங்கியதை பலத்த கரகோசங்களுக்கிடையே தெரிவித்தார்.திருமண தகவல் மின் இதழ் வெளியீட்டின் துவக்கம், பயன் அடைந்தோர் விபரம், சமுதாயம் சந்திக்கும் சவால்கள் பற்றியும், மணமகள் விபரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும்வேண்டுகோள் விடுத்தார்.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் திருவிழா பற்றியும், ஆன்மீக ஒருங்கிணைப்பு சமுதாய வளர்ச்சிக்கு உதவும் என்ற கருத்தை வைத்தார்.கடந்த ஆண்டு ஜெய்பூரில் நடந்த அகில பாரதிய சத்திரிய மகா சபை கருத்தரங்கில் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்திற்கு கிடைத்த அங்கீகாரம் பற்றியும், வட இந்தியா மற்றும் வெளி நாடுகளின் TNRBA உறுப்பினர்களுக்கு கிடைத்து வரும் மரியாதை, கௌரவத்தை பற்றியும் விவரித்தார்.நிறைவாக தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் வளர்ச்சியை மேலும் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும், சமுதாய மக்களின் பாதுகாப்பு மற்றும் உயர்வுக்கும் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் கரங்களை அனைவரும் ஒருங்கிணைந்து வலுபடுத்த வேண்டும் என்று கூறி நிறைவு செய்தார்.
மாநில, மாவட்ட நிர்வாகிகள் மேடையில் சால்வைகள் மற்றும் நினைவு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். பின்னர் மாநில மகளிரணி நிர்வாகிகள் மேடையில் சால்வைகள் மற்றும் நினைவு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள். மதுரை மாவட்டத்தின் சார்பாக மாநில தலைவர், பொது செயலாளருக்கு சால்வைகள் அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.
திருமண தகவல் மின் இதழின் ஒன்பதாம் பதிப்பை முன்னாள் பொது செயலாளர் திரு.B.ஜெயச்சந்திரன் சிங் அவர்கள், மாநில கௌரவ தலைவர் திரு.J.மோகன் சிங், மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் முன்னிலையில் வெளியிட்டார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் சார்பாக முக்கிய விருந்தினர்களுக்கு பகவத் கீதை புத்தகம் பரிசளிக்கப்பட்டது. ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா அறக்கட்டளை தலைவர் திரு.s.சசிகபூர் சிங் அவர்கள் சால்வை மற்றும் நினைவு பதக்கம் அணிவித்து கெளரவிக்கப்பட்டார்கள். கோவை மாவட்ட தலைவர் திரு.V.சுரேஷ் பாபு சிங், அவர்கள் அவருக்கே உரித்தான கவிதை நடையில் நிர்வாகிகளை வாழ்த்தி சங்கத்தின் வளர்ச்சிக்கான கருத்தை பதிவு செய்தார். கோவை மாவட்டத்தின் சார்பாக சமுதாய அறக்கட்டளைக்கு Rs.10,000/- நன்கொடை வழங்கப்பட்டது.
நம் தாய் மொழி இந்தியை எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில், வட சென்னை – திருவள்ளூர் மாவட்ட செயலாளர் திரு.B.K.பாலாஜி சிங், ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியர் இந்தி வித்வான் எழுதிய SARAL HINDI என்ற புத்தகத்தை மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் வெளியிட்டார்.
தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் மாநில தலைவருக்கும், பொது செயலாளருக்கும் சால்வைகள் அணிவித்து கெளரவபடுத்தினார்கள்.
வட சென்னை மாவட்டத்தின் சார்பாக மாநில தலைவர், பொது செயலாளர் மற்றும் முக்கிய சிறப்பு விருந்தினர்கள் சால்வை அணிவித்து கெளரவபடுத்தினார்கள்.
10,+2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த 12 மாணவ – மாணவியர்களுக்கு வெள்ளி பதக்கம், சான்றிதழ், மற்றும் ரொக்க பரிசு கொடுத்து கெளரவிக்கப்பட்டார்கள். அது போல 7வது சர்வதேச நேரடி அபாகஸ் போட்டியில் கலந்து கொண்டு வின்னராக வெற்றி பெற்ற மாணவி செல்வி. மித்தி ஶ்ரீக்கும் வெள்ளி பதக்கம், மற்றும் ரொக்க பரிசு கொடுத்து கௌரவிக்கப்பட்டது.
தருமபுரி மாவட்டத்தின் சார்பாக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு Rs.5,500/- விழா நிதி வழங்கப்பட்டது.
விழாவில் கலந்துக்கொண்ட ஊடக துறையை சேர்ந்த 25 பேர் மேடையில் சால்வைகள் மற்றும் நினைவு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி.D.ருக்மணி பாய் மகளிரணியின் செயல்பாடுகளை விளக்கி, மாவட்ட மகளிரணி அமைப்பை வலுபடுத்த வேண்டுகோள் விடுத்தார். மாநில மகளிரணி அமைப்பு செயலாளர் திருமதி.A.அபிராமி பாய் அவர்கள் மகளிர் சுய உதவி குழுக்கள் அமைத்து நம் சமுதாய பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டியதின் அவசியத்தை பகிர்ந்தார்.
மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் எழுச்சியுரை நிகழ்த்தினார்கள். சங்கம் கடந்து வந்த பாதையில் ஏற்பட்ட தடைகள், ஒற்றுமையின் காரணமாக நம்முடைய சீரான வளர்ச்சி ஆகியவற்றை பற்றி விளக்கினார்கள்.அரசாங்கத்திடம் நமது கோரிக்கைகளை தொடர்ந்து நினைவூட்டுவதை பற்றியும் எடுத்துரைத்தார்கள்.மாவட்ட சங்கங்கள் அவ்வபோது கூடி சமுதாய பணியில் அதிக கவனம் செலுத்த வேண்டும், தங்களின் மாவட்டத்திற்கு அருகில் கிளைகள் இல்லாத பகுதியில் பொருத்தமானவர்களை நியமித்து கிளைகள் துவக்க முயற்ச்சிகள் மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். நமது திருமண வரன் சேவை தமிழ்நாட்டில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் சிறப்பான பெயர் பெற்றுள்ளதாக கூறினார்.ராணி பாய் நினைவு தினத்தை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெகு சிறப்பாக கொண்டாட வேண்டும் என மகளிரணி நிர்வாகிகளை கேட்டுக் கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு.V.ரவிச்சந்தர் சிங் அவர்கள் ஆண்களுக்கு வரன் கிடைப்பதில் ஆகும் கால தாமதம் பற்றியும், அதற்கான காரணங்களையும் விளக்கி கூறினார்.
திருநெல்வேலி – தென்காசி மாவட்ட தலைவர் திரு.N.பிரேமானந்தா சிங் அவர்கள் சென்னையில் உள்ள சொந்தங்கள் அனைவரையும் இல்லம் தோறும் தேடிச்சென்று தொடர்புகொண்டு TNRBA வின் நமது சமூதாய சேவைகளை தெரியப்படுத்தி அனைவரையும் பயனுறச்செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
கரூர் மாவட்ட தலைவர் பேராசிரியர் Dr.R.லட்சுமணன் சிங் அவர்கள் மாணவர்களின் எதிர்கால படிப்பு, நுழைவு தேர்வுகளுக்கான ஆன்லைன் கவுன்சிலிங் பற்றியும்,
வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த திரு.ரவீந்திரநாத் தாக்கூர் சிங் அவர்கள் சமுதாய வளர்ச்சிக்கான ஆக்கபூர்வமான கருத்துக்களை பற்றியும் எடுத்துரைத்தார்கள்.
மாநில இளைஞரணி நிர்வாகிகள், விழா நாயகர்களான கிருஷ்ணகிரி, ஓசூர் நிர்வாகிகள் அனைவரையும் மேடையில் சால்வைகள் மற்றும் நினைவு பதக்கங்கள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
மதியம் 1.30 மணியளவில் விழாவில் கலந்து கொண்ட 1500 மேற்பட்டவர்களும் நாவிற்கு ருசியான அறுசுவை உணவு உண்டு மகிழ்ந்தார்கள்.
முன்னதாக காலை 9 மணியளவில், இலவச மருத்துவ முகாம் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களால் துவக்கப்பட்டது. சுமார் 300 க்கு மேற்பட்டோர் மருத்துவ முகாமில் பங்கு பெற்று பயன் அடைந்தார்கள். நமது குடும்ப விழாக்களில் முதன் முறையாக செயல்படுத்தப் பட்ட இலவச மருத்துவ முகாம் சமுதாய மக்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
மதியம் 2 மணி முதல் இலவச கல்யாண கேந்திரா நிகழ்ச்சி துவங்கியது 128 மணமகனும், 37 மணமகளும் கல்யாண கேந்திராவில் தங்களின் பெயர்களை பதிவு செய்தார்கள். கல்யாண கேந்திரா பகுதி முழுவதும் நிரம்பி வழிந்தது. கலந்தாய்வின் போது மூன்று திருமணங்கள் பேசி முடிக்கப்பட்டதாக தகவல் கிடைக்கப் பெற்றோம். பதிவு செய்யப்பட்ட மணமகள் பற்றிய விபரங்கள் மேடையில் கலை நிகழ்ச்சிகளின் இடையே தெரிவிக்கப்பட்டது.
மதியம் 2 மணி முதல் மகளிரணி சார்பாக கலை நிகழ்ச்சிகளும் துவங்கியது. சிறார்களுக்கு உடல் உறுப்புகளை அடையாளம் காணுதல், கூடையில் பந்து எறிதல், கப் அடுக்குதல், பலூன் ஊதி கப்பை தள்ளுதல், போன்ற போட்டிகளும், பெரிய குழந்தைகளுக்கு நினைவாற்றல் போட்டியும் நடைபெற்றது.
சிலம்ப வீர விளையாட்டும் நடைபெற்றது. சிறுமியரின் பரதநாட்டியம், சிறுவர்களின் நடனம், சிறுமியர்களின் நடனம் போன்றவற்றில் நமது சமுதாய குழந்தைகள் அவர்களது திறமைகளை வெளிபடுத்தினார்கள்.
மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி D.ருக்மணி பாய், தபேலா இசையுடன் பாடல்கள் பாடி பரவசமூட்டினார். மாஸ்டர். சேத்தன் கணேஷ் சிங் கீ போர்ட் வாசித்து திறமையை வெளிப்படுத்தினான்.
மாலை 5 மணியளவில் கலை நிகழ்ச்சியில் பங்குகொண்டோருக்கும், விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றோருக்கும் பரிசுடன் தமிழ் -இந்தி அகராதி TNRBA SARAL HINDI புத்தகம் வழங்கப்பட்டது.
மாலை 5.30 மணியளவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் யாவும் மன நிறைவுடன் நிறைவு பெற்றது.
நன்றி, வணக்கம்.
J.பிரகாஷ் சிங்
மாநில பொது செயலாளர்