தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மின் இதழ் ஆறாம் பதிப்பாக,
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா பூஜை சிறப்பிதழ் வெளியீட்டு விழா,
25.06.2023 அன்று மாலை 6 மணியளவில், ஆவடியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இறை வணக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கியது.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை தலைவர் திரு.S.சசிகபூர் சிங் அவர்கள் விழாவுக்கு தலைமை வகித்து துவக்கவுரை நிகழ்த்தினார்கள்.
வட சென்னை, திருவள்ளுர் மாவட்ட செயலாளர் திரு.B.K.பாலாஜி சிங் அவர்கள்,
சிறப்பு விருந்தினர்கள் மற்றும் விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றார்.
வட சென்னை, திருவள்ளுர் மாவட்டவ தலைவர் திரு.E.ராஜேந்தர் சிங் அவர்கள்,
TNRBA தலைமை சங்க நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள் மற்றும் ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் அனைவரையும் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள்.
TNRBA திருநெல்வேலி – தென்காசி மாவட்ட தலைவர் திரு.N.பிரேமானந்தா சிங்,
வேலூர் மாவட்ட தலைவர் திரு.G.தேவேந்திர சிங், வட சென்னை, திருவள்ளுர் மாவட்டவ தலைவர் திரு.E.ராஜேந்தர் சிங், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்
திரு.M.ரவீந்திர நாத் சிங், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.E.ஹரி சிங்
ஆகியோர் TNRBA செயல்பாடுகள், ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் பூஜை விழா அனுபவங்களை பற்றி பேசினார்கள்.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை சார்பாக, தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்க சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை செயலாளர் திரு.D.விஷால் சிங்,
பொருளாளர் திரு.D.விஜய் கமல் சிங் மற்றும் பலர் அறக்கட்டளை செயல்பாடுகள், ஶ்ரீதேவுத்தி மாத்தாவின் அருளாசிகளை பற்றி எடுத்துரைத்தார்கள். பொருளாளர் திரு.D.விஜய் கமல் சிங் அவர்கள், இந்தாண்டு ஆலவயல் பூஜைக்கான வரவு செலவு கணக்குகளை பகிர்ந்து தங்களின் வெளிப்படையான செயல்பாடுகளை பதிவு செய்து கொண்டார்கள்.
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் சிறப்புரை நிகழ்த்தினார்.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா பூஜை சிறப்பிதழ் வெளியீட்டுக்கான முயற்சிகள், தகவல் பரிமாற்றங்கள், கூட்டுப்பணி, மின் இதழில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி எடுத்துரைத்தார்கள். ஆலவயலில் கட்டவிருக்கும் சமுதாய கூடம் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்தி அனைவரும் நன் கொடைகள் வழங்க வேண்டுகோள் விடுத்தார்கள்.
TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையில் சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளை விளக்கி, அடுத்த மாதம் 30ஆம் தேதி ஓசூரில் நடை பெறும் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் வருடாந்திர பொது குழு கூட்டம், இலவச கல்யாண கேந்திரா விழாவில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்தார்.
பின்னர் ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா பூஜை சிறப்பு மின் இதழை TNRBA நிர்வாகிகள் வெளியிட, அதனை ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் ஶ்ரீதேவுத்தி மாத்தா கீ ஜே ! கரகோசம் விண்ணை பிளக்க பெற்றுக் கொண்டார்கள்.
அரக்கோணத்தை சேர்ந்த செல்வி. C.ஹேமலதா பாய் அவர்களுக்கு விழாவில் Rs.15,000/- கல்வி நிதி வழங்கப்பட்டது.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை துணை செயலாளர்
திரு.R.பிரவீண் ராஜ் சிங் அவர்கள் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்கள்.
விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் செல்வி.K.கமலி அவர்கள்,மிக நேர்த்தியாக ஹிந்தி மொழியில் தொகுத்து வழங்கி விழாவுக்கு மெருகேற்றினார்கள்.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், வீட்டில் சமைத்த சுவையான உணவினை பரிமாறி தங்களின் விருந்தோம்பல் பண்பை வெளிபடுத்தினார்கள்.
விழா இனிதே இரவு 8.30 மணியளவில் நிறைவு பெற்றது.
ஶ்ரீதேவுத்தி மாத்தா கீ ஜே !
வாழ்க தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கம் !
வாழ்க ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாத்தா கோவில் அறக்கட்டளை !!
நன்றி, வணக்கம்.
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்