தமிழ் நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் பற்றி (ப.எண்: 10/2019)
பொந்தில் சங்கம் 1969 ம் ஆண்டு சுமார் 50 ஆண்டுகவ்ளுக்கு முன்பு தமிழ் நாட்டின் சென்னையில் நிறுவப்பட்டது.
சில சங்க உறுப்பினர்களின் மன நிலை மற்றும் வெளிப்படையற்ற செயல்பாட்டு வழி காரணமாக பல தசாப்தங்கள் கடந்துவிட்டாலும் பொந்தில் சங்கம் எந்த இலக்கையும் அல்லது கணிசமான வளர்ச்சியையும் அடையவில்லை. இது போதுமான சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவவில்லை.மேலும் நல்ல தலைமை இல்லாததால், நமது சமூகத்தின் கோரிக்கைகளை பொறுத்தமான மட்டத்தில் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை.
மாநில/மாவட்டம் முழுவதும் உள்ள சமூக உறுப்பினர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், பல தசாப்தங்களாக முன்னேற்றம் இல்லாமல் இருக்கும் மாநிலத்தில் பரந்த முன்னேற்றத்தை கொண்டு வருவதற்காக தமிழ் நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம் (ப.எ:10/2019) உருவாக்கப்பட்டது.
டாக்டர்.ஜி.பவானி சிங் அவர்கள் தலைமையில் அனைத்து மூத்த தலைவர்களும் ஒன்று கூடி தமிழ் நாட்டில் ராஜ்புத் பொந்தில் சமூக முன்னேற்றத்திற்க்காக பணியாற்ற தொடங்கினார்கள்.
நமது தலைவர் டாக்டர். பவானி சிங் அவர்கள் தமிழ் நாட்டிலுள்ள மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து சமூக மக்களை சந்தித்து மாவட்ட குழுக்களை அமைப்பதற்க்கான முயற்ச்சிகளை மேற்கொண்டார். இப்போது சுமார் 27 மாவட்ட குழுக்கள் அமைக்கப் பட்டு, நமது சமூக இரத்த சொந்தங்களை அடையாளம் கண்டு அவர்களை ஒரு அமைப்பின் கீழ் கொண்டு வர அடிக்கடி கூட்டங்கள் நடத்தப்படுகிறது. நமது சமுதாய மக்களுக்கு உதவும் பொருட்டு இலவச கல்யாண மையத்தை ஏற்பாடு செய்கிறார்.
நமது தலைவர் மாநில அளவில் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து நமது சமூக தலைவர்களையும் உறுப்பினர்களையும் சந்தித்து நமது சமூகத்தின் முன்னேற்றத்திற்கான எண்ணங்களை பகிர்ந்து கொள்கிறார். ஆண்டுதோறும் குடும்ப விழாக்களின் போது வெவ்வேறு மாநில நம் சமூக தலைவர்களை நம் மாநிலத்துக்கு அழைக்கும் ஒரு நடைமுறையை பின்பற்றி நாடு முழுவதும் உள்ள சமூக உறுப்பினர்களிடையே பிணைப்பை உறுவாக்கினார். கம்போடியாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சமூக மாநாட்டில் நம் சங்க உறுப்பினர்களுடன் கலந்து கொண்டார்.
டாக்டர்.ஜி.பாவானி சிங் தலைமையில் புதிய செயற்குழு அமைக்கப்பட்ட கடந்த 5 ஆண்டுகளில், சங்கத்தால் குறிப்பிடதக்க சாதனைகள் செய்யப்பட்டுள்ளன.
• சமூக வளற்ச்சியில் அதிக கவனம் செலுத்துவதற்காக பெண்கள் பிரிவு, இளைஞர் பிரிவு, சட்ட பிரிவு உருவாக்கப்பட்டன.
• சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மாநில மற்றும் மத்திய அரசாங்கத்திடம் பல கோரிக்கைகள் சமர்ப்பிக்கபட்டது.
• மாவட்ட நிர்வாகம், மற்றும் பிற அதிகாரிகளை சந்தித்து தமிழ் நாடு, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள செஞ்சியில் ராஜா தேசிங் நினைவாக ஒரு சமூக மண்டபம் மற்றும் நினைவு சின்னங்கள்வ் கட்டுவதற்கான கோரிக்கையை சமர்பித்தார்.
• ராஜா தேசிங்கின் நினைவு தினத்தை கொண்டாடும் பொருட்டு செஞ்சியில் இரு முறை மாபெரும் பேரணி நடத்தப்பட்டது, ஒரு பேரணியில் சட்டமன்ற உறுப்பினர் திரு.மஸ்தான் அவர்கள் முதன்மை விருந்தினராக அழைக்கப்பட்டார்.இது தவிர ராஜா தேசிங் இறுதி மூச்சுவிட்ட இடத்தில் உள்ள மண்டபம் சுத்தம் செய்யப்பட்டு ராஜஸ்தான் மார்பிளால் அலங்கரிக்க பட்டு, மின்சாரம்,தண்ணீர் வசதிகள் செய்ய பட்டுள்ளது, இவை அனைத்தும் சங்க உறுப்பினர்களின் சொந்த பங்களிப்பில் செய்யப்பட்டது அந்த தொகை ஏறக்குறைய 10 லட்சம் ருபாய். இப்போது அந்த இடம் ஒரு கோவில்வ் போன்று உள்ளது. மாநில அரசு அந்த இடத்தை ஆய்வு செய்து நம்மிடம் ஓப்படைத்துள்ளது.
• தனது கணவர் ராஜா தேசிங்கின் மறைவுக்குப் பிறகு ராணி ராணிபாய் உயிர் தியாகம் செய்த தமிழ் நாட்டின் ராணிப்பேட்டையில் உள்ள இடம் சட்ட விரோதமாக முஸ்லீம்களால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தது. அவர்களிடமிருந்து சுமார் 1 1/2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டது. கோவிட் கால கட்டத்திலும் நம் சொந்தங்கள் ஒன்று கூடி, மண்டபத்தை மலர்களால் அலங்கரித்து பெரிய விழா நடத்தி ராணி பாய்க்கு அஞ்சலி செலுத்தினார்கள். தமிழக அரசு 1 1/2 ஏக்கர் நிலத்தை அபிவிருத்தி செய்வதற்க்கும், நினைவு சின்னத்தை பரமாரிப்பதற்க்கும் 75 லட்சம் ருபாய் ஓதுக்கியுள்ளது.
• திட்டக்குடியில் உள்ள எங்கள் வம்சத்தை சேர்ந்த ஊனமுற்ற பெண்ணுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. நமது சமூக மக்களுக்கு கல்வி நிதியாக பல ஆயிரம் ருபாய் வழங்கப்பட்டுள்ளது. நமது சமூகத்தில் சிறுநீரக சிகிற்சைக்காக சென்னையில் உள்ள ஒரு இளஞருக்கும், கிருஷ்ணகிரியிலுள்ள பெண்ணுக்கும் தலா 50000/- ருபாய் வழங்கப்பட்டது.
• இணயதளத்தை துவக்குவதன் மூலமாகவும், நம்முடைய பல்வேறு சமூக ஊடகங்ளின் மூலமாகவும், தரவு தளத்தை உருவாக்குவதன் மூலமாகவும் நமது சொந்தங்கள் அனைவரையும் ஒன்றாக்க நமது சங்கம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
• கடந்த 5 ஆண்டுகள் சாதனைகள் பற்றி பெருமை கொள்வதில் நமது சங்கத்திற்க்கு எவ்வித ஐய்யமும் இல்லை ஆனால் நம் சமூகத்தின் முன்னேற்றத்திற்க்கான பிரகாசமான எதிர்காலத்தை எதிர்பார்க்கிறது.
ABOUT TAMIL NADU RAJPUT BONDIL ASSOCIATION (Reg.No:10/2019)
Bondil Association was founded in Chennai, Tamil Nadu about 50 years back during the year 1969.
Then Bondil Association was not achieved any goal or substantial growth even several decades passed due to mind set of few association members and their non transparent way of functioning. This results inadequate community members togetherness and also not able to represent our community’s demands to Government in a appropriate levels due to lack of good leadership.
Based on the Community members guidance across the state / district members, Tamil Nadu Rajput Bondil Association (Reg.No.10/2019) was formed to bring the vast progress across the state that lacked over the past decade.
Under the leadership of Dr.G.Bhavani Singh all veteran community leaders came together and started working towards the uplift of our Rajput Bondil community in Tamil Nadu.
Our President Dr.G.Bhavani Singh toured entire Tamil Nadu districts, met the community peoples and taken initiatives to form district committees. Now around 27 districts committees are formed and frequent gatherings are taking place to identify our community bloods and bringing them to single fold. He is organizing free Kalyana Kendra’s for supporting our community members.
Our President touring not only state level also different states and meeting our community leaders and members and sharing thoughts for uplift of our community. He made a practice of inviting different state community leaders to our state during yearly family gathering and created bond between community members across the country. He attended International level community conference at Cambodia along with other committee members.
In last 5 years after formation of new Executive Committee under the presidentship of Dr.G.Bhavani Singh, remarkable achievements has been made by the association.
- Women Wing, Youth Wing and Legal Wing formed to have more focus on the community development.
- Several representation made with State and Central administration for the uplift of our community.
- Met District Administration and other Government officials and submitted memorandum to build a community Hall and memorials at Gingee, Villupuram Dist. Tamil Nadu.
- Conducted massive rally twice at Gingee to celebrate Raja Desingh’s anniversary and Member of Legislative Assembly Shri. Masthan was invited as Chief Guest in the rally. In addition to this the place where the King Raja Desingh had his last breath was cleaned and maintained with a park, hall with electricity, water and decorated with Rajasthan Marbles with the help of the TNRBA Members own fund which comes around 10 Lakhs. Now it appears as Raja Desingh’s beautiful Temple. The Government of Tamil Nadu surveyed the area and it was handed over to us. Welfare assistance were provided to poor and common people to mark the anniversary.
- In Ranipettai, Tamil Nadu where the queen Rani Bai sacrificed her life after the demise of her Husband Raja Desingh, the lands were encroached unlawfully by the Muslims. With great effort about 1 ½ acres of land was recovered from them. Even in the Covind-19 period a huge function was conducted by our family members by decorating with flowers and thus the tribute paid to the Rani Bai. The Tamil Nadu Government had sanctioned Rs. 75 Lakhs to develop the area of 1 ½ acres Land and to maintain the monument.
- Financial assistance was provided to a disabled woman from our dynasty in Tittakkudi. Many thousands of rupees have been given to the people of our community as education fund. Our community has provided financial assistance of over Rs. 50,000 to a youth in Chennai for his kidney treatment and also a woman in Uthangarai Taluk, Krishnagiri Dist. respectively.
Association is taking proactive steps to bring all Tamil Nadu Rajput Bondil as one by launching website, through our community’s various social medias and creating database.
TNRBA has no qualms in taking pride in its achievements during the past five years, but envisages a brighter future and strive for betterment of community.
******