President’s Message _ Dr.G.Bhavani Singh Ji _ 01.01.2024

President’s Message _ Dr.G.Bhavani Singh Ji _ 01.01.2024

அன்பு சொந்தங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கங்கள்.

உங்கள் அனைவருக்கும் 2024 ம் ஆண்டின் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

03.01.2021 அன்று கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்கள் இணைந்து கோவையில் நடத்திய  குடும்ப விழாவில், நமது சமுதாயத்தை அடுத்த கட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்லும் நோக்கில்  டேட்டா பேஷுடன் இணைக்க பட்ட புதிய இணயதளம் (www.tnrba.com) நமது மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்களின் சீரிய முயற்ச்சியில் துவக்கப்பட்டதை நாம் அறிவோம்.

காலத்தின் மாற்றத்திற்கேற்ப, இணைய தளத்தில் பல மாற்றங்களை மேற்கொண்டு, புதிப்பிக்கப்பட்ட புதிய இணையதளத்தை புது பொலிவுடன் இந்த புத்தாண்டு அன்று வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். 

சமுதாய மக்களின் நலனில் அக்கறை கொண்டு கடின உழைப்பின் மூலம் இதனை நடைமுறை படுத்தியுள்ள மாநில பொது செயலாளர், இணயதள இயக்குனர், பொறியாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்களுக்கும், அவருக்கு இணையதள பணியில் பக்கபலமாக இருந்து வரும் பொறியாளர், இணயதள துணை இயக்குனர் திரு.R.ஹரி கணேஷ் அவர்களுக்கும் எனது சார்பாகவும், நமது சங்கத்தின் சார்பாகவும், சமுதாய மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இணையதள சேவை தமிழ்நாட்டில் சிதறுண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு பாலமாக அமைவதுடன், கடல் தாண்டி வாழ்ந்து கொண்டிருக்கும் நமது சமுதாய மக்களை ஒருங்கிணைத்து வருவது, நம் சங்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியின் முன்னேற்றத்திற்க்கு சான்றாக உள்ளது.

இந்த புத்தாண்டில், நம் சமுதாய மக்களின் வாழ்வாதாரம் மேலும் வளர்ச்சி பெற வேண்டும் என வாழ்த்துவதோடு சமுதாய வளர்ச்சிக்கு, சங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் அனைவரது மேலான பேராதரவையும், ஒத்துழைப்பையும் தர வேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

இப்படிக்கு,

Dr.G.பவானி சிங்
தலைவர் – தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்.
தேதி: 01.01.2024

————————-

Warm Greetings to all my Dear Ones !!

Wish you all very HAPPY NEW YEAR 2024.

We all aware that, to take our community in to next level of development, Data base linked Website (www.tnrba.com) was launched by our State General Secretary, Shri.J.Prakash Singh on 03.01.2021 at Coimbatore during the Family Meet Gathering Function which was jointly organized by Erode, Tirupur & Coimbatore Districts committees.

On the further development process, I am very happy to relaunch the website this New year with a new look and several structural changes to suit the present scenario.

On behalf of myself, our association and our community, I offer my thanks and best wishes to TNRBA State General Secretary, Website Director & Engineer Shri.J.Prakash Singh, and TNRBA Website Deputy Director, Engineer Shri.R.Hari Ganesh.

TNRBA Website is not only bridging the community peoples living scattered in Tamil Nadu but also uniting the people living in abroad also. This is the solid proof of the progress of our community’s next stage of development.

In this new year, I wish the people of our Rajput Bondil community to have more improvement in their livelihood and I also request them to give their utmost support and cooperation to the association on the community development activities.

Thanks & Regards.

Yours Loving Brother,

Dr.G. Bhavani Singh

TNRBA State President

Date. : 01.01.2024