ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாதா பூஜை
2023 ஆம் ஆண்டு, மே மாதம் 18, 19, 20 ஆகிய மூன்று தினங்கள் ஆலவயலில் நடைபெற்ற இராஜபுத்திர வம்சாவழியினரின் ஆன்மீக திருவிழாவின் காரணமாக ஆலவயல் கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாதா பூஜை 19.05.2023 அன்று மாலை வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவின் ஒரு அங்கமாக, புதுக்கோட்டை கிளை சங்கம் 40 ஆண்டு நிறைவு விழா,இராஜ்புத் பொந்தில் கல்யாண கேந்திரா ஆலவயலில் காலை முதல் மதியம் வரை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
மாநில தலைமை சங்கத்தின் சார்பாக நானும், மாநில உதவி செயலாளர் திரு.E.ராஜேந்தர் சிங், நெல்லை தென்காசி மாவட்ட தலைவர் திரு.N.பிரேமானந்தா சிங், நெல்லை தென்காசி மாவட்ட செயலாளர் திரு.கங்காதர திலக் சிங், வேலூர் மாவட்ட தலைவர் திரு.G.தேவேந்திர சிங், வட சென்னை மாவட்ட செயலாளர் திரு.B.K.பாலாஜி சிங் மற்றும் ஏராளமானோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தோம்.
ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாதா பூஜை விழாவை மிக சிறப்பாக நடத்தியமைக்கு, ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாதா அறக்கட்டளை தலைவர் திரு.S.சசி கபூர் சிங், செயலாளர் திரு.D.விஷால் சிங், பொருளாளர் திரு.D.விஜய் கமல் சிங் மற்றும் அனைத்து அறக்கட்டளை நிர்வாகிகளுக்கும்,
புதுக்கோட்டை கிளை சங்கம் 40 ஆண்டு நிறைவு விழா, இராஜ்புத் பொந்தில் கல்யாண கேந்திரா ஆகியவற்றை வெகு சிறப்பாக நடத்தியமைக்கு, புதுக்கோட்டை மாவட்ட தலைவர் திரு.V.ரவிசந்தர் சிங், செயலாளர் திரு.K.ராஜேந்தர் சிங், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி. A.காஞ்சனா அருண் அவர்களுக்கும், அனைத்து புதுக்கோட்டை நிர்வாகிகளுக்கும், TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் சார்பாகவும், தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாகவும் நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
இராஜபுத்திர பொந்தில் உறவுகள் அனைவரும் தெரிந்து கொள்ள ஆலவயல் ஶ்ரீதேவுத்தி மாதா பூஜை விழா பற்றிய நிகழ்வுகளை தொகுத்து சிறப்பு மின்இதழ் விரைவில் வெளியிடுகிறோம்.
கடுமையான உழைப்பால் இராஜபுத்திர ஆன்மீக திருவிழாவினை மிக வெற்றிகரமாக நடத்தியமைக்கு.. நன்றிகளையும், வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவிக்க காலதாமதம் ஆக கூடாது என்பதால் இந்த பதிவை பகிருகிறேன். விரைவில் விரிவான உரையுடன் சந்திக்கலாம்.
ஜெய் ஶ்ரீதேவுத்தி மாதா !
நன்றி, வணக்கம்.
J.பிரகாஷ் சிங்,
TNRBA மாநில பொது செயலாளர்