Sri Sathyanarayana Poojai
தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில், தென் சென்னை கிளை சங்கத்தின் சார்பாக, நம் சமுதாய நலனுக்காக ஶ்ரீசத்தியநாராயண பூஜை, நம் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் நல்லாசியுடன், 17.04.2022 அன்று காலை 9.30 மணியளவில், சென்னை,மேற்கு மாம்பலம், VMA மண்டபத்தில், பண்டிதர்கள் வேதம் முழங்க மிக சிறப்பாக சிறப்பாக நடைபெற்றது.
வட சென்னை, தென் சென்னை, தென் சென்னை புறநகர் மற்றும் வெளி ஊர்களிலிருந்து நம் சமுதாய மக்கள் பெரும் திரளாக அரங்கம் நிரம்ப குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜையில் கலந்துக் கொண்டு ஶ்ரீசத்தியநாரயண சுவாமியின் அருளை பெற்றார்கள்.
TNRBA மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், மாநில பொருளாளர் திரு.K.பாலாஜி சிங், TNRBA ஒருங்கிணைந்த வட சென்னை, திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.E.ராஜேந்தர் சிங், செயலாளர் திரு.B.K.பாலாஜி சிங், TNRBA தென் சென்னை புறநகர் மாவட்ட துணை தலைவர் திரு.K.ரவிசந்தர் சிங், செயலாளர் T.ரமேஷ் சிங், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக் கொண்டார்கள். மற்றும், திரு.மனோகர் லால் (தென் சென்னை), திரு. ரவி சிங் (தென் சென்னை), திருமதி.பாரதி பாலேந்தர், திரு.கிருஷ்ணா சிங் (அம்பத்தூர்), திரு.பூபால் சிங், திருமதி.நளினி, திருமதி.அனிதா, திருமதி.பத்மினி (திருவல்லிக்கேணி), திரு.சந்தர் சிங் (விழுப்புரம் ), திரு. ராஜேந்தர் சிங், திரு.ஜெய்சங்கர், திரு.ஹரி சிங் (திருத்தணி ), திருமதி. வித்யா, திருமதி.வசந்தா (ஆலந்தூர்), ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள்.
மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள் Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையில் சங்க செயல்பாடுகளை பற்றி சுருக்கமாக விளக்கினார்கள். பின்னர், சிறப்பு அழைப்பாளர்களுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும், தென் சென்னை மாவட்டத்தின் சார்பாக மாநில பொது செயலாளர் நினைவு பரிசுகள் வழங்கினார்கள். ஒருங்கிணைந்த வட சென்னை, திருவள்ளூர் மாவட்ட தலைவர் திரு.E.ராஜேந்தர் சிங் அவர்கள் ஶ்ரீசத்யநாரயணா பூஜை விழாவை மிக சிறப்பாக நடத்தியமைக்கு, TNRBA தென் சென்னை மாவட்ட தலைவர் Dr.M.கோவர்த்தன சிங், துணை தலைவர் திரு.N.மஞ்சுநாத் சிங், செயலாளர் திரு.N.மகேந்திரநாத் சிங், இணை செயலாளர் திரு.R.கணேஷ் சிங், பொருளாளர் திரு.N.பீம் சிங், TNRBA தென் சென்னை மாவட்ட மகளிரணி தலைவி திருமதி. நளினி தர்மா சிங், துணை தலைவி திருமதி.குமாரி போபால் சிங், செயலாளர் திருமதி.G.ராஜேஷ்வரி சிங், இணை செயலாளர் திருமதி. பாரதி பாலேந்தர், பொருளாளர் திருமதி.ஷோபா கிஷோர் ஆகியோருக்கு நன்றிகள் தெரிவித்து பாராட்டினார்கள்.
ஆலவயல் வம்சாவளி திரு.கபூர் சிங் தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சமுதாய நல அறக்கட்டளைக்கு ₹ 5000/- நன்கொடைக்கான காசோலையை மாநில பொது செயலாளரிடம் வழங்கினார்கள். அடுத்து நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியின் போது, “TNRBA திருமண தகவல் மின் இதழ்” பற்றி வெகுவாக பாராட்டி, பலரும் சந்தா தொகையினை TNRBC நல அறக்கட்டளை செயலாளரிடம் ஆன்லைன் மூலம் வழங்கினார்கள். தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக அறுசுவை மதிய உணவு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
நீண்ட இடைவெளிக்கு பின்னர், குடும்ப சகிதம் திரளாக பூஜையில் கலந்துக் கொண்ட, மிகுந்த மன நிறைவுடன், குழு புகைபடத்துக்கு பின்னர் நிகழ்ச்சி மாலை 3 மணியளவில் நிறைவு பெற்றது.
மாநில தலைமை சங்கம், ஶ்ரீசத்தியநாரயணா பூஜை விழாவை வெகு சிறப்பாக நடத்தியமைக்கு, TNRBA தென் சென்னை கிளை சங்கத்திற்கு வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது. சமுதாய உறுப்பினர்களை ஒருங்கிணைக்கும் இது போல நிகழ்ச்சிகள் மாவட்டம் தோறும் நடத்தி, சமுதாய வளர்ச்சிக்கு மாவட்ட கிளைகள் உதவிட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
மாநில பொது செயலாளர்,
தமிழ்நாடு ராஜ்புத் பொந்தில் சங்கம்.