ஹோலி பூஜை விழா பற்றிய தொகுப்பு (Holi Puja).

ஹோலி பூஜை விழா பற்றிய தொகுப்பு (Holi Puja).

சென்னை வடக்கு… திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக ஹோலி பூஜை…
சென்னை தாம்பரம் லோகோவை அடுத்த அகரம் பகுதியில், இராஜ்புத் தெருவில் அமைந்துள்ள நமது சமுதாய கிருஷ்ணர் கோவிலில், 30.03.2024 (சனிக்கிழமை) அன்று மாலை 6.30 மணியளவில் துவங்கியது.

TNRBA மாநில செயற்குழு உறுப்பினர்
திரு.E.ஹரி சிங் அவர்கள் ஹோலிகா தகன்
(தீ எரித்தல்) ஏற்பாடுகள் செய்ய,

TNRBA மாநில பொது செயலாளர்
திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள் தீயவைகளை நல்லவைகள் வெல்லும் என்கிற கருத்தின் அடிப்படையில் தீ மூட்டி சடங்கை துவக்கி வைத்தார்கள். இராஜ்புத் சொந்தங்கள் அனைவரும் ஆடி…பாடி ஹோலிகா தகனை சுற்றி வந்தார்கள்.

பின்னர் ஹோலி விழாவில் கலந்து கொண்ட அனைவரும் ஒருவருக்கொருவர் வண்ணங்கள் பூசி ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்கள்.

கிருஷ்ணர் கோவிலில் பெண்கள் பக்தி பாடல்கள் பாட பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. சொந்தங்கள் தத்தம் வீடுகளில் செய்த உணவுகளை இறைவனுக்கு படைத்து பூஜை பிரசாதமாக அனைவருக்கும் வழங்கினார்கள்.

அடுத்த சமுதாய நிகழ்வாக, பூஜையில்கலந்து கொண்ட TNRBA மாநில – மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த உறுப்பினர்களுக்கு,

வட சென்னை திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பாக, TNRBA மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங்,
TNRBA மாநில பொருளாளர்
திரு.K.பாலாஜி சிங் ஆகியோர் சால்வைகள் போர்த்தி கவுரவித்தார்கள்.

TNRBA மாநில துணை தலைவர்
திரு.K.விஜயகுமார் சிங் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த,
TNRBA மாநில பொது செயலாளர்
திரு.J.பிரகாஷ் சிங் அவர்கள்
TNRBA மாநில தலைவர்
Dr.G.பவானி சிங் அவர்களின் ஓப்பற்ற தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் செயல்பாடுகளை விளக்கினார்கள்.

ஹோலி பண்டிகை விழாவில்,
TNRBA மாநில உதவி செயலாளர், வட சென்னை – திருவள்ளூர் மாவட்ட தலைவர்
திரு.E.ராஜேந்தர் சிங்,
மாவட்டத்தின் இணை செயலாளர்
திரு.K.கமல்நாத் சிங்,
மாவட்டத்தின் பொருளாளர்
திரு.S.பிரேம் சிங்,
மாவட்டத்தின் இளைஞரணி தலைவர்
திரு. யுவராஜ் சிங்,

TNRBA தென் சென்னை மாவட்டத்தின் செயலாளர், மாநில செயற்குழு உறுப்பினர்
திரு.N.மகேந்திரநாத் சிங்,
மாவட்டத்தின் இணை செயலாளர்
திரு.R.கணேஷ் சிங்,
மாவட்டத்தின் பொருளாளர்
திரு.பீம்.சிங்,
மாவட்ட துணை தலைவர்
திரு.N.மஞ்சுநாத் சிங்,

மற்றும்…
திரு.ஜெய் சங்கர் சிங்
திரு.S.தீலிப் குமார் சிங்
திரு.G.கெஜேந்திர் சிங்
திரு.B.அசோக் குமார் சிங்
திரு.T.சுரேந்தர் சிங்
திரு.B.நாகராஜ் சிங்

மகளிரணி நிர்வாகிகள்..
திருமதி.R.டில்லிபாய்
திருமதி.உஷா கோபிநாத் சிங்
திருமதி.அகல்யா பாய்
திருமதி.ஷோபா அசோக் குமார்சிங்
திருமதி.சதீஷ் குமார் சிங்
திருமதி.இந்திரா தேவி
திருமதி.கஸ்தூரி லஷ்மணன் சிங்
திருமதி.கெஜேந்திர் சிங்

மற்றும் மாவட்டத்தின் குடும்ப உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டு ஹோலி பூஜையை சிறப்பித்து தந்தார்கள்.

சொந்தங்களை ஒருங்கிணைத்து ஹோலி பண்டிகை பூஜையினை மிக சிறப்புடன் நடத்தியமைக்கு,
TNRBA வட சென்னை திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும், TNRBA மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங், மாநில பொருளாளர் திரு.K.பாலாஜி சிங் அவர்களுக்கும் TNRBA தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அதுபோல TNRBA தென் சென்னை மாவட்ட தலைவர் Dr.M.கோவர்த்தன சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி ஹோலி பூஜை விழாவில் கலந்து கொண்ட TNRBA தென் சென்னை மாவட்ட நிர்வாகிகள் அனைவருக்கும் TNRBA தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

வாழ்க இராஜ்புத் பொந்தில் சமுதாயம் !
ஓங்குக நம் ஒற்றுமை !!

J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்