ஶ்ரீ துல்ஜா பவானி மாத்தா பூஜை, மதுரை மாவட்டம், வாடிப்பட்டி, சிங் தெருவில் அமைந்துள்ள ஶ்ரீ துல்ஜா பவானி மாத்தா கோவிலில் 10.05.2024, வெள்ளிக்கிழமை அன்று காலை 7 மணயளவில் வெகு சிறப்பாக நடைபெற்றது. திரு.பிரேம்நாத் சிங் உட்பட அனைத்து மேலூர் ராம் சிங் வகையறா பங்காளிகள், ஆலவயல் ஶ்ரீ தேவுத்தி மாத்தா கோவில் பங்காளிகள், தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் மாநில – மாவட்ட நிர்வாகிகள் மற்றும் 500 க்கு மேற்பட்ட இராஜ்புத் பொந்தில் உறவுகள் பூஜையில் கலந்து கொண்டு துல்ஜா பவானி மாத்தா அருளை பெற்றார்கள்.
காலை சிற்றுண்டிக்கு பிறகு,
11 மணியளவில் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் வாடிப்பட்டி கிளை ஆண்டு விழா கூட்டம்,
ஶ்ரீ கிருஷ்ணா மஹாலில் TNRBA மதுரை மாவட்ட தலைவர் திரு.ஹரிதேவ் சிங் அவர்கள் தலைமையில், TNRBA மாநில செயற்குழு உறுப்பினர் திரு.R.G.சேகர் சிங் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
வாடிபட்டி ஶ்ரீ துல்ஜா பவானி மாத்தா கோவில் பங்காளிகள் TNRBA மாநில – மாவட்ட நிர்வாகிகளை மேடைக்கு வரவேற்று சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்கள்.
வாடிபட்டி திரு.M.லோகேஷ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள்.
மதுரை மாவட்ட தலைவர்
திரு. ஹரிதேவ் சிங்,
மாநில செயற்குழு உறுப்பினர் திரு.R.G.சேகர் சிங், திருநெல்வேலி மாவட்ட தலைவர்
திரு.N.பிரேமானந்தா சிங், திருநெல்வேலி மாவட்ட செயலாளர் திரு.திலக் சிங், புதுக்கோட்டை மாவட்ட தலைவர்
திரு. V.ரவிச்சந்திரன் சிங், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர்
திரு.K.ராஜேந்தர சிங், வாடிப்பட்டி கல்யாண கேந்திரா பொறுப்பாளர் மதுரை திரு.B.மதன கோபால் (TNEB) ஆகியோர் கலந்து கொண்டு சமுதாய நலன் மற்றும் சங்க செயல்பாடுகள் பற்றி பேசினார்கள்.
ஆலவயல் ஶ்ரீ தேவுத்தி மாத்தா அறக்கட்டளை நிர்வாகிகள், TNRBA மாநில பொது செயலாளருக்கும் இதர நிர்வாகிகளுக்கும் சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்கள்.
TNRBA மாநில பொது செயலாளர்
திரு J.பிரகாஷ் சிங் அவர்கள் தனது சிறப்புரையில்
Dr.G.பவானி சிங் அவர்களின் தலைமையில் சங்கத்தின் செயல்பாடுகள், சாதனைகள், வருடாந்திர குடும்ப விழா, அறக்கட்டளையின் செயல்பாடுகள் மற்றும் கல்யாண கேந்திரா வரன் சேவைகள் பற்றி எடுத்துரைத்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.
TNRBA மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பிலும், TNRBA திருநெல்வேலி – தென்காசி மாவட்டத்தின் சார்பிலும்
மாநில பொது செயலாளருக்கு சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்கள்.
TNRBA மாநில – மாவட்ட நிர்வாகிகள் சார்பில் வாடிபட்டி ஶ்ரீதுல்ஜா பவானி மாத்தா பங்காளிகளுக்கு சால்வைகள் அணிவித்து கௌரவிக்கப்பட்டார்கள்.
மதுரை மாவட்டம் கோமதிபுரம் பகுதியை சேர்ந்த திரு.R.பாலாஜி சிங் (Retd DCTO),
சிவகங்கை மாவட்டம், கானாடுகாத்தான் பகுதியை சேர்ந்த திரு.B.கஜேந்திர சிங் ஆகியோர் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சமுதாய நல அறக்கட்டளை வளர்ச்சி நிதிக்கு தலா Rs.500/- நன்கொடைகள் வழங்கினார்கள்.
TNRBA வாடிப்பட்டி கிளை பொறுப்பாளர்
திரு.பிரேம்நாத் சிங் அவர்கள் ஆண்டு விழாவில் கலந்து கொண்ட TNRBA மாநில மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சொந்தங்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்கள்.
தேசிய கீதம் இசைக்கப்பட்டு விழா நிறைவு பெற்றது.
நாவிற்கினிய மதிய உணவு பூஜை, ஆண்டு விழா மற்றும் கல்யாண கேந்திராவில் கலந்து கொண்ட 500க்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கி உபசரிக்கப்பட்டது. அது போல ஆயிரக்கணக்கான வாடிபட்டி பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
மதியம் 3 மணியளவில் இலவச கல்யாண கேந்திரா துவங்கியது. மதுரை திரு.B.மதன கோபால், திரு.ஹரிதேவ் சிங், புதுக்கோட்டை திரு.V.ரவீந்திரநாத் சிங், திருநெல்வேலி திரு.N.பிரேமானந்தா சிங் ஆகியோர் திருமண வரன் பதிவு படிவங்களை பெற்று கலந்து கொண்டோரின் சந்தேகங்களுக்கு விளக்கம் தந்தார்கள். கல்யாண கேந்திராவில் 39 வரங்கள் பதிவு செய்யப்பட்டது. இந்த வரன் விபரங்கள் ஜீலை முதல் வாரம் வெளிவரும் திருமண தகவல் மின் இதழ் பதிப்பு – 13ல் பதிவேற்றம் செய்யப்படும். கல்யாண கேந்திராவில் பதிவு செய்யப்பட்ட வரன் விபரங்கள் TNRBA திருமண தகவல் வாட்ஸப் குழுவில் விரைவில் பகிரப்படும்.
மாலை 6 மணிக்கு
ஶ்ரீ சோட்டி மாதா பூஜை மிகவும் சிறப்புடன் நடைபெற்றது. மேலூர் ராம் சிங் வகையறா பங்காளிகள், ஆலவயல் ஶ்ரீ தேவுத்தி மாத்தா கோவில் பங்காளிகள் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் மாநில – மாவட்ட நிர்வாகிகள் மற்றும் இராஜ்புத் பொந்தில் உறவுகள் பூஜையில் கலந்து கொண்டு ஶ்ரீ சோட்டி மாத்தா அருளை பெற்றார்கள்.
பூஜையில் கலந்து கொண்ட அனைத்து சொந்தங்களுக்கும் இரவு உணவு வழங்கி உபசரிக்கப்பட்டது.
மூன்று நாள் பூஜை, TNRBA வாடிபட்டி சங்க ஆண்டு விழா, இலவச கல்யாண கேந்திரா ஆகியவற்றிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்து, வெளி மாவட்ட சொந்தங்கள் அனைவருக்கும் தங்கும் வசதிகள், மூன்று நாட்களும் நாவிற்கினிய உணவுகள் பரிமாறி ஆன்மீக சேவையுடன் சமுதாய வளர்ச்சி மற்றும் ஒற்றுமைக்கான மிக பெரிய சமுதாய சேவையினை ஆற்றிய திரு.பிரேம்நாத் சிங் உட்பட அனைத்து மேலூர் ராம் சிங் வகையறா பங்காளிகள் அனைவருக்கும் TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் சார்பாகவும், தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். TNRBA வாடிப்பட்டி கிளை ஆண்டு விழாவை சிறப்புடன் நடைபெற உதவியாக இருந்த TNRBA மதுரை மாவட்ட நிர்வாகிகள், TNRBA திருநெல்வேலி – தென்காசி மாவட்ட நிர்வாகிகள், TNRBA புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோருக்கும் TNRBA தலைமை சார்பாக நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
வாடிப்பட்டி ஶ்ரீதுல்ஜா பவானி மாத்தா கோவில் பங்காளிகள்….
ஶ்ரீதுல்ஜா பவானி மாத்தா கோவில் வரலாறு, பூஜை வழிபாட்டு முறைகள், புகைப்படங்கள் ஆகியவற்றை தலைமை சங்கத்திற்கு அனுப்பி வைத்தால், பூஜை வழிமுறைகளை நம் வருங்கால சந்ததியினர் மறக்காமல் பொக்கிஷமாக வைத்திருக்க அதனை புத்தகமாக தயாரித்து வெளியிட உதவி புரிவோம் என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெய் ஶ்ரீ துல்ஜா பவானி மாத்தா !
நன்றி, வணக்கம்.
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்