நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி பற்றியதொகுப்பு – 3:-

நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு - 3

நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி பற்றியதொகுப்பு – 3:-

“தொலைக்காட்சி பேட்டி ஒளிபரப்பு”

தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சமுதாயத்தின் தொடர் கோரிக்கைகளை அரசுக்கு கொண்டு சேர்க்கும் மகத்தான பணியில் ஊடகத்துறை நண்பர்களின் சேவை மிகவும் பாராட்டுதலுக்குறியது.

ராணிப்பேட்டையில் இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணி பற்றிய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 29.06.2024 சனிக்கிழமை அன்று ராணிப்பேட்டை ஊடகத்துறை நண்பர்களை வரவழைத்து சால்வைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி கௌரவித்தோம்.

ராணிப்பேட்டை இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணி நிறைவு பெற்று திறப்பு விழா காணும் வரை அவர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் தொடர வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

TNRBA மூத்த நிர்வாகிகள் பத்திரியாளர்களை சந்தித்து பேட்டி கொடுத்த நிகழ்ச்சி தொலைகாட்சியில் ஒளிபரப்பாகியுள்ளது. அதனை இத்துடன் பகிர்ந்து மகிழ்ச்சி கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்