ராணிப்பேட்டை இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணி பற்றிய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 29.06.2024 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை பாலாறு வடகரையில் அமைந்துள்ள இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு மண்டபத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங்,மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், மாநில பொருளாளர் திரு.K.பாலாஜி சிங், மாநில செயற்குழு உறுப்பினர் திரு.மணிராம் சிங், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திரு.G.தேவேந்திர சிங், வேலூர் மாவட்ட செயலாளர் திரு.L.பிரகாஷ் சிங், வேலூர் மாவட்ட துணை தலைவர் திரு.சீத்தாராம் சிங், மாவட்ட மூத்த தலைவர் திரு.R.ரவீந்திரநாத் டாக்கூர் சிங், விண்ணமங்கலம் வட்டார தலைவர் திரு.சிவசங்கர் சிங், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.J.தினேஷ் சிங், TNRBA தென் சென்னை மாவட்ட துணை தலைவர் திரு.N.மஞ்சுநாத் சிங், தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் திரு.R.கணேஷ் சிங், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.M.ரவீந்திரநாத் சிங், மாநில மகளிரணி துணை அமைப்பாளர் திருமதி.R.வசந்தி பாய் ஆகியோர் கலந்துக் கொண்டு இராஜா தேசிங் – இராணி பாய் திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி பகிரப்பட்டது.
ராணிப்பேட்டை இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணிக்கு ருபாய் 2.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்த தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின்,தமிழ்நாடு பொதுப்பணி துறை அமைச்சர் மாண்புமிகு E.V.வேலு, தமிழ்நாடு நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு தங்கம் தென்னரசு, தமிழ்நாடு கதர் மற்றும் ஜவுளி துறை அமைச்சர் திரு.R.காந்தி,தமிழ்நாடு நீர்வளத் துறை அமைச்சர் திரு.துரைமுருகன், தமிழ்நாடு சிறுபான்மையர் நலத்துறை அமைச்சர் திரு.K.S.மஸ்தான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ராணிப்பேட்டையில் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாக மெகா பேனர் வைக்கப்ப்பட்டது.
இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் பகுதியை அனைவரும் அறியும் வண்ணமும், சமூக விரோத செயல்களில் ஈடுபோடுவரை எச்சரிக்கும் வகையிலும் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாகவும் நிறுவப்பட்ட பெயர்பலகை முன்பு செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஆறுக்கு மேற்பட்ட ஊடகத்துறையை சார்ந்த செய்தியாளர்கள் கலந்துக் கொண்டார்கள். ஊடகத்துறை மூலமாக தமிழ்நாடு முதலமைச்சருக்கும் இதர அமைச்சர்களுக்கும் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாகவும், அனைத்து இராஜ்புத் பொந்தில் சமுதாய மக்களின் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
பின்னர், ராணிபேட்டை நகராட்சி சேர்மன்
திருமதி.K.சுஜாதா வினோத், நகராட்சி உறுப்பினர் திரு.C.வினோத் ஆகியோரை நேரில் சந்தித்து, சால்வைகள் அணிவித்து, இனிப்புகள் வழங்கி நன்றிகள் தெரிவித்தோம்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் வேலூர் மாவட்ட – மாநில நிர்வாகிகள் சார்பில் மதிய உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணி பற்றிய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி மிகவும் சிறப்புடனும், வெற்றியுடனும் நடந்து முடிந்தது.
விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், விழா வெற்றிகரமாக நடைபெற அயராமல் உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் TNRBA மாநில Dr.G.பவானி சிங் அவர்களின் சார்பாகவும், தலைமை சங்கத்தின் சார்பாகவும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
நன்றி, வணக்கம்.
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்.