நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு – 2

நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி பற்றிய தொகுப்பு – 2

வாழ்த்தி, கௌரவித்தோம்🙏🙏

ராணிபேட்டையில் இராஜா தேசிங் – இராணி பாய் அவர்களின் நினைவு சின்னங்களை புனரமைக்க, தமிழ்நாடு அரசுக்கு 1 ஏக்கர் நிலம் மேதகு ஆளுநர் பெயரில் வழங்கிய நிலத்திற்கு சொந்தகாரரான இஸ்லாமிய சகோதரரை (கையில் நிலத்தின் டாக்குமெண்ட் வைத்திருப்பவர்) நேற்று (29.06.2024) இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்ன மண்டபத்திற்கு வரவழைத்து,
சால்வைகள் அணிவித்து இனிப்புகள், பழங்கள் அளித்து கௌரவித்தோம்.

இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணி சிறந்த முறையில் நடைபெற்று மக்களின் பயன்பாட்டுக்கு விரைவில் வரவேண்டும் என அந்த இஸ்லாமிய சகோதரர் வாழ்த்தினார்.

அவரை தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம்.

J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்