நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி தொகுப்பு – 4

நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி தொகுப்பு – 4

“அமைச்சருடன் சந்திப்பு”

ராணிப்பேட்டை இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் புனரமைக்கும் பணிக்கு ருபாய் 2.5 கோடி நிதி ஒதுக்கீடு பற்றிய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாக TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி 29.06.2024 சனிக்கிழமை அன்று காலை 11 மணியளவில் ராணிப்பேட்டை பாலாறு வடகரையில் அமைந்துள்ள இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டோம்.

பின்னர் புனரமைக்க பட உள்ள 1 ஏக்கர் இடத்தை அரசிடம் ஒப்படைத்த இஸ்லாமிய சகோதரர், நமது கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சேர்த்துக் கொண்டிருந்த ஊடகத்துறை நண்பர்கள், இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்களின் பெயர் பலகை வைக்க அனுமதி கொடுத்து, புனரமைக்கும் பணியில் முழு ஈடுபாடு கொண்டுள்ள ராணிபேட்டை சேர்மன் ஆகியோருக்கு சால்வைகள் அணிவித்து மரியாதைகள் செய்து வாழ்த்தினோம்.

TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி நேற்று (30.06.2024) காலை 11 மணியளவில் தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங்,
மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், மாநில பொருளாளர் திரு.K.பாலாஜி சிங், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் திரு.G.தேவேந்திர சிங், வேலூர் மாவட்ட செயலாளர் திரு.L.பிரகாஷ் சிங், வேலூர் மாவட்ட மூத்த தலைவர் திரு.R.ரவீந்திரநாத் டாக்கூர் சிங், ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு.J.தினேஷ் சிங், TNRBA தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் திரு.R.கணேஷ் சிங், மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் திரு.M.ரவீந்திரநாத் சிங், TNRBA ஓசூர் மாவட்ட தலைவர் திரு.J.பாலாஜி சிங்(ஜெய்குரு), ஓசூர் மாவட்ட பொருளாளர் திரு.N.L.சங்கர் சிங் ஆகியோர்

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் மாண்புமிகு R.காந்தி அவர்களை
நேரில் சந்தித்து சால்வை போர்த்தி,சந்தன மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி நன்றிகளைத் தெரிவித்தோம்.
TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்கள் அப்போது கைபேசி மூலம் அமைச்சரை தொடர்பு கொண்டு அவரை நேரில் சந்திக்க இயலாததின் காரணத்தை விளக்கி அமைச்சருக்கு நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார்.

தமிழ்நாடு கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சர் மாண்புமிகு R.காந்தி அவர்கள் எங்களின் வாழ்த்துக்களை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டு புனரமைக்க பட இருக்கும் ராணிப்பேட்டை இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்களின் கட்டிட கலை கட்டிட கலை (architectural) மாதிரிகளை காண்பித்து விவரித்தார். அவர் காட்டிய கட்டிட கலை வரைபடம் தயாரிக்க ஒரு ஆண்டு ஆனதாகவும், அதனை முதல்வரிடம் காண்பித்து நிதி ஒதுக்கீடு பெற்றதாகவும் கூறினார். மேலும் இராஜா தேசிங் – இராணி பாய் நினைவு சின்னங்கள் தங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் எனவும், ராணிபேட்டைக்கு வருகை தருவோர் அதனை கண்டிப்பாக பார்த்து செல்லும் அளவுக்கு அதன் கட்டிடக்கலை பணி இருக்கும் எனவும் பெருமையுடன் கூறினார்.

இராஜ்புத் பொந்தில் சமுதாய மக்களின் நீண்ட நாள் கனவுகள், தமிழ்நாடு அரசின் ஆக்கப்பூர்வமான நிலைப்பாடு, ராணிபேட்டை நிர்வாகம் மற்றும் மக்களின் ஒத்துழைப்பு, இராஜ்புத் பொந்தில் சமுதாய மக்களின் ஆதரவு , இராஜா தேசிங் – இராணி பாய் ஆன்மாக்களின் ஆசியுடன் விரைவில் துவங்கி, இனிதே நடைபெற்று, குறுகிய காலக்கட்டத்திற்குள் துவக்க விழா காண பிரார்த்திப்போம்.

நன்றி, வணக்கம்.

J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்