செஞ்சியை ஆண்ட மாவீரன் இராஜா தேசிங் அவர்களின் 332 வது பிறந்த நாள் விழா, அவர் உயிர் நீத்த இடம் அமைந்துள்ள செஞ்சியை அடுத்த கடலியில், அவரது வம்சாவழியினராகிய தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சமுதாயத்தின் மாநில தலைவர் Dr.G.பவானி சிங் அவர்களின் வழிகாட்டுதல்களின்படி இன்று (28.04.2024, ஞாயிறுக்கிழமை) காலை 11 மணியளவில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் வெளியேற்றப்பட்டவர்கள் மற்றும் வக்ஃப் வாரியம் அமைச்சர் மாண்புமிகு செஞ்சி K.S.மஸ்தான் அவர்களை தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்க நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இன்முகத்துடன் வரவேற்றார்கள்.
மாண்புமிகு அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் இராஜா தேசிங்கின் திருவுருவ படத்திற்கு பூஜைகள் செய்து புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.
அவரை தொடர்ந்து மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான திரு.L.P.நெடுஞ்செழியன், கடலி ஊராட்சிமன்ற தலைவர் திரு.L.பெருமாள், கடலி ஊராட்சிமன்ற துணை தலைவர் திரு.யூசுப் அலி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் இராஜா தேசிங் அவர்களின் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பில் மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங், மாநில துணை தலைவர் திரு.K.விஜயகுமார் சிங், மாநில பொருளாளர் திரு.K.பாலாஜி சிங், மாநில உதவி செயலாளர் திரு.E.ராஜேந்தர் சிங், விழுப்புரம் மாவட்ட தலைவரும், கடலி ஒன்றிய உறுப்பினர் திரு.M.R.ரவிச்சந்திரன், தென் சென்னை மாவட்ட துணை தலைவர் திரு.N.மஞ்சுநாத் சிங், தென் சென்னை மாவட்ட இணை செயலாளர் திரு.R.கணேஷ் சிங் மற்றும் பல நிர்வாகிகள் இராஜா தேசிங் திருவுருவ படத்திற்கு புஷ்பாஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்க நிர்வாகிகள் அனைவரையும் மாண்புமிகு அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் சால்வைகள் அணிவித்து கௌரவித்தார்கள். தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் சார்பாக அமைச்சர் செஞ்சி K.S.மஸ்தான் அவர்கள் கௌரவிக்கப்பட்டார்கள்.
இராஜா தேசிங் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கடலி கிராம துப்புரவு பணியாளர்கள் அனைவரும் அமைச்சர் முன்னிலையில் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. அது போல விழாவில் கலந்து கொண்ட செஞ்சி கடலி வாழ் பொது மக்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
ஐந்துக்கு மேற்பட்ட முதன்மை ஊடகத்தினர்கள் இராஜா தேசிங் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை பிரசுரம் செய்வதற்காக சேகரித்தார்கள். தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்க நிர்வாகிகள் அவர்களிடம் கலந்துரையாடல் செய்த போது செஞ்சியில் இராஜா தேசிங் அவர்களுக்கு திருவுருவ சிலை, மணிமண்டபம் போன்ற நம் சமுதாய கோரிக்கைகள் நிறைவேற ஊடக துறையின் ஆதரவையும், ஒத்துழைப்பையும் கோரினார்கள்.
இராஜா தேசிங் அவர்களின் 332 வது பிறந்த நாள் விழா சிறப்பாக நடைபெற, மண்டபம் தூய்மை செய்தல்,சாமியானா, சேர்கள் ஏற்பாடு, தேவையான இனிப்பு வகைகள், அமைச்சர் மற்றும் இதர அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுத்தல் போன்ற பணிகளை மிகவும் திறம் பட செய்த TNRBA விழுப்புரம் மாவட்ட தலைவரும், கடலி ஒன்றிய உறுப்பினருமான திரு.M.R.ரவிச்சந்திரன் சிங் அவர்களுக்கு TNRBA தலைமை சங்கத்தின் சார்பாக பாராட்டுதல்களையும், நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
விழாவில் நூற்றுக்கு மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு நம் குல விளக்கு இராஜா தேசிங் அவர்களை வணிங்கி வாழ்த்தியது
நமது இராஜ்புத் பொந்தில் சமுதாய மக்களுக்கு கிடைத்த பெருமையாகும்.
வாழ்க இராஜா தேசிங் புகழ் !
ஓங்குக இராஜ்புத் பொந்தில் சமுதாய ஒற்றுமை !!
J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்