சர்வதேச மகளிர் தின விழா பற்றிய தொகுப்பு:-

சர்வதேச மகளிர் தின விழா பற்றிய தொகுப்பு:-

TNRBA மாநில – மாவட்ட மகளிரணி சார்பாக 2024ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின விழா 03.03.2024 அன்று ஏலகிரி மலையில் TNRBA மாநில தலைவர் Dr.G.பவானி சிங் மற்றும் TNRBA மாநில பொது செயலாளர் திரு.J.பிரகாஷ் சிங் அவர்களின் வழிகாட்டுதலின்படி வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

தருமபுரி, பனந்தூர், வேதகரம், ஒசூர், வீரான்குப்பம், விண்ணமங்கலம், எல்லை நகரம் பகுதியில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட இராஜபத்திர குடும்பங்கள் அனைவரும் கலந்து கொண்டு இவ்விழாவை வெற்றி விழாவாக மாற்றி சிறப்பித்தார்கள்.
இந்த வெற்றி விழாவானது தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் சங்கத்தின் ஒற்றுமையை பறைசாற்றுவதாக அமைந்தது.

விழாவில் முதலாவதாக இராஜா தேசிங்கு மற்றும் இராணி பாய் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மரியாதை செலுத்தப்பட்டது

மகளிர் தின விழா கேக் வெட்டி முறைப்படி துவக்கப்பட்டது. மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி.D.ருக்மணி பாய் அவர்கள் தனது இல்லத்தில் தயாரித்த பாதாம் பாலை அனைவருக்கும் கொடுத்து விழாவில் கலந்து கொண்ட அனைவரது உள்ளங்களையும் குளிர வைத்தார்கள்.

விழாவில் கலந்து கொண்ட அனைத்து குடும்பத்திற்கும் TNRBA உண்டியல் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. குடும்ப உறுப்பினர்கள் தங்களால் இயன்ற பணத்தை அதில் சேமித்து ஆண்டு விழாவின் சமயத்தில் சமுதாய வளர்ச்சிக்கு உதவிடும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி.D.ருக்மணி பாய் மற்றும் அமைப்பு செயலாளர் திருமதி.A.அபிராமி பாய் ஆகியோர் மகளிர் அணி முன்னேற்றத்திற்காக ஒரு சிற்றுரையை ஆற்றினார்கள். கடந்த முறை நடந்த மகளிர் தினத்தின் போது சொல்லப்பட்ட மகளிர் குழு அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அதனை செயல்படுத்திய ஓசூர் வட்ட சாண சந்திரன் பகுதியை சார்ந்த மகளிர் அணி தலைவி பேசியபோது ” சென்ற ஆண்டு மகளிர் தின கொண்டாட்டத்தில் போது இளைய நகரத்தை சேர்ந்த மாநில மகளிரணி ஒருங்கிணைப்பாளர் திருமதி.பவானி பாய் அவர்கள் சேமிப்பு திட்டத்தை பற்றி விளக்கியபோது எங்களுக்கும் ஆர்வம் வந்தது. 15 இராஜபுத்திர பெண்களை சேர்த்து ஒரு மகளிர் அணி குழுவை துவக்கினோம்.ஒரு வருட காலத்தில் இதுவரை நாங்கள் சேமித்த பணம் ஒரு லட்சம் என்று பெருமையுடன் கூறினார் “.

விழாவில் கலந்து கொண்ட அனைவரும் இந்த முயற்ச்சியை கைதட்டி பாராட்டினார்கள். இந்த சேமிப்பு திட்டம் இனி பிற மாவட்டங்களிலும் விரிவடையும் என்பதை அந்த கைத்தட்டில் மூலம் உணர முடிந்தது.

சிறியவர்கள் பெரியவர்கள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இவ்விழாவில் எடுத்த முக்கிய முடிவு அடுத்த வருடம் மகளிர் தினத்தில் மாநாடு நடத்துவது என்பதுதான். அது நிச்சயம் சாத்தியம் ஆகும் என்பதை இந்த தருணத்தில் நமது மாநில தலைவருக்கும், மாநில பொது செயலாளருக்கும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்.

மதியம் அனைவருக்கும் மதிய உணவு தர்மபுரி மாவட்ட மகளிர் அணி சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவில், ஆம்பூர் சிக்கன் பிரியாணி, கத்திரிக்காய் கொஜ், ரைட்டா, ஸ்வீட் கேசரி, வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம் , ஊறுகாய் போன்றவைகள் இடம் பெற்றது. மாநில மகளிரணி அமைப்பாளர் அவரது வீட்டிலேயே வெஜிடபிள் பிரியாணி, தயிர் சாதம், பாதாம் பால் போன்றவற்றை தயார் செய்து கொண்டு வந்தது மகளிரணியின் மீது அவர் கொண்டுள்ள ஈடுபாட்டை எடுத்துக் காட்டியது. கிருஷ்ணகிரி மாவ்ட்டத்தின் சார்பாக உணவருந்த பேப்பர் பிளேட்கள், தண்ணீர் பாட்டில்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உணவு முடிந்தவுடன் குழந்தைகளுக்கும், மகளிர்களுக்கும், ஆண்களுக்கும் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவ்ட்ட மகளிரணியின் சார்பாக பரிசுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

போட்டிகளுக்கு பின்னர் இராஜபுத்திர சொந்தங்கள் அனைவரும் படகு சவாரி சென்று மகிழ்ந்தார்கள். மேலும் மகளிர்களும் குழந்தையாகவே மாறி ஊஞ்சலும் ரங்கராட்டினமும் ஆடி மனம் மகிழ்ந்தார்கள். பொழுதுபோக்கு அம்சங்களுக்கான கட்டண செலவு அனைத்தையும் TNRBA மகளிரணி ஏற்றுக் கொண்டது.

மாலை தேநீருடன் சர்வதேச மகளிர் தின விழா இனிதாக முடிவு அடைந்தது.

மகளிர் அணியின் மைல்கல்லாக திகழும் இவ்விழாவை சிறந்த முறையில் புகைப்படம் எடுக்க மாநில தலைவரின் உதவியை கேட்டோம். மாநில தலைவர் அவர்கள் ஓசூர் பவானிஸ் ஸ்டுடியோஸ் புகைப்பட நிபுணரை அனுப்பி எல்லா நிகழ்ச்சிகளையும் சிறந்த முறையில் படம் எடுக்க உதவினார்கள். அதற்காக மாநில தலைவருக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். புகைப்பட நிபுணருக்கு ஒரு சிறிய நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

விழா நிகழ்ச்சி புகைப்படங்களை சொந்தங்கள் பார்த்து மகிழ அனைத்தையும் கூகுள் டிரைவ் லிங்க் மூலம் பகிர்ந்துள்ளோம்.

இந்த வெற்றி விழாவை நடத்துவதற்காக மிகவும் உறுதுணையாக இருந்த நமது தலைமை சங்கத்திற்கு நாங்கள் என்றும் கடமைப்பட்டுள்ளோம்.

TNRBA தர்மபுரி மாவட்ட தலைவர் திரு.ஜெயராம் சிங் அவர்கள் குடும்பத்தாருடன் இவ்விழாவில் கலந்து கொண்டார் அதற்காக அவருக்கு எங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தர்மபுரி மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி.லலிதா பாய் அவர்கள் தர்மபுரியை சுற்றியுள்ள அனைத்து ரத்த சொந்தங்களையும் அழைத்து வந்து இவ்விழாவை சிறப்பு விழாவாக மாற்றினார். அவருக்கும் TNRBA மகளிர் அணி நன்றி கூற கடமைப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தின விழா சிறப்புடன் நடைபெற நிதி உதவி செய்த,மாநில தலைவர் Dr.G.பவானி சிங், மாநில துணைத் தலைவர் திரு.B.கஜேந்திர சிங், கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு.B.இந்தர் சிங், ஓசூர் வட்ட மூத்த நிர்வாகி திரு.சிவசங்கர் சிங், மாநில இளைஞரணி துணை செயலாளர் திருM.அசோக் குமார் சிங், கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாளர் திரு N.சங்கர் சிங், தருமபுரி மாவட்ட செயலாளர் திரு.பாலாஜி சிங், தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் திரு.L.ரகுநாத் சிங், பணந்தூர் கௌரவ தலைவர் திரு.கிருஷ்ணா சிங், மாநில மகளிர் அணி ஆலோசகர் திருமதி.ப்ரீத்தி வினைய், மகளிர் அணி சுற்றுலா ஆலோசகர் திரு.ஹரிஷ் கணேஷ் சிங், தருமபுரி நிர்வாகி திரு.ஜெயபிரகாஷ் சிங், பணந்தூர் மாவட்ட அமைப்பாளர் திரு.பாலாஜி சிங் , ஓசூர் மகளிர் அணி நிர்வாகிகள் திருமதி.ஜான்சி பாய், திருமதி. கோகிலா பாய், திருமதி .ஹேமாவதி பாய், திருமதி.ரஜினி பாய், திருமதி.அம்மு பாய், திருமதி ஹேமா பாய், திருமதி. ருக்மணிபாய், ஆகியோர் அனைவருக்கும் மாநில மாவட்ட மகளிர் அணி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

மதிய உணவை இளைய நகரத்தில் உள்ள திருமதி.பவானி பாய் அவர்களின் கணவர் திரு.தேசிங் சிங் அவர்கள் பொறுப்பு எடுத்துக்கொண்டு ஆம்பூரில் இருந்து பிரியாணி ஆர்டர் செய்து அதை ஆட்டோவில் ஏற்றி கொண்டு வந்து ஏலகிரி மலைக்கு மேல் உள்ள பூங்காவில் எடுத்து வந்து கொடுத்தார் அவருக்கும் அவரது துணைவியாகும் மகளிர் அணி என்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளது

மேலும் இவ்விழாவை மிக விமர்சியையாகவும், மகிழ்ச்சியாகவும் நடக்க உதவியாக இருந்த இராஜபத்திர சொந்தங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.

கூடிய விரைவில் நமது சமுதாய மக்களை கணக்கெடுக்கும் பணியில் தலைமை சங்கத்துக்கு எங்களால் முடிந்த உதவி செய்ய உள்ளோம். அதற்கான விதையை இவ்விழாவில் விதைத்துள்ளோம்.

ஒன்றுபடுவோம்! வென்று வாழ்வோம் !!
TNRBA மாநில – மாவட்ட மகளிரணி
🙏🙏🙏

சர்வதேச மகளிர் தின விழாவை சிறந்த முறையில் திட்டமிட்டு, தலைமை சங்கத்திடம் ஆலோசனைகள் பெற்று, சிறந்த முறையில் நடத்தி, ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் பற்றி விவாதித்து, கலந்து கொண்டவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியுடன் பல பொழுதுபோக்கு அம்சங்களில் பங்கு பெற செய்து, அவர்களுக்கு நாவிற்கினிய உணவுகளை அளித்து, அந்தந்த பகுதியை சேர்ந்த சொந்தங்கள் பங்கு பெற போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து சர்வதேச மகளிர் தின விழாவை வெற்றி விழாவாக நடத்தி சாதனை புரிந்துள்ள மாநில மகளிரணி அமைப்பாளர் திருமதி.D.ருக்மணி பாய் மற்றும் அமைப்பு செயலாளர் திருமதி.A.அபிராமி பாய் ஆகியோருக்கு தமிழ்நாடு இராஜ்புத் பொந்தில் தலைமை சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அது போல அவர்களின் வெற்றிக்கு துணை நின்ற மகளிரணி நிர்வாகிகள், இளைஞரணி நிர்வாகிகள், விழாவில் கலந்து கொண்ட மகளிரணியினர் அவரது குடும்பத்தார் அனைவருக்கும் TNRBA சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

நன்றி, வணக்கம்.

J.பிரகாஷ் சிங்
TNRBA மாநில பொது செயலாளர்